நீடாமங்கலம், அக். 18- மன்னார்குடி கழக மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டமும், தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அறிவார்ந்த கருத்தரங்கமும் 30.9.2023 அன்று நீடாமங்கலம் பெரியார் படிப்பகத்தின் மாடியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாவட்டத் தலைவர் தங்க.வீரமணி தலைமை யேற்றார், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாவட்டச் செயலாளர் இரா.கோபால் வரவேற்புரை ஆற்றி னார். மாவட்டத் தலைவர் ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், மாவட் டச் செயலாளர் கோ.கணேசன், ஒன் றியத் தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன், இளைஞர் அணையின் மாவட்டத் தலைவர் கா.ராஜேஷ்கண்ணன், ஒன்றிய செய லாளர் சா.அய்யப்பன், இளைஞர் அணி நகரத் தலைவர் இரா.அய் யப்பன், நகரத் தலைவர் வா.சரவணன் முன்னிலை வகித்து கருத்துரை ஆற்றினார். பகுத்தறிவு ஆசிரியரணியினுடைய செயல்பாடுகளைப் பற்றி யும் அதனுடைய திட்டங்கள் பற்றி யும் நோக்க உரையாக பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலை வர் வா.தமிழ்பிரபாகரன் நோக்க வுரை ஆற்றினார். பகுத்தறிவு ஆசிரி யரணி மண்டல அமைப்பாளர் சி.ரமேஷ் அவர்கள் இணைப்புரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரையில், தந்தை பெரியார் காலகட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணியில் பேராசிரியர் நன்னன், இன்று உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய முனைவர் க.பொன்முடி, மிகச் சிறந்த பெரியாரிய எழுத்தாளர் இறையன், பேராசிரியர் வீரபாண்டி யன், அருணா ராஜகோபால் போன்ற ஏராளமான ஆசிரியர்கள் பொறுப்பாளராக இருந்து இதனை வளர்த்து எடுத்தார்கள் . அதன் பிறகு இன்று பகுத்தறிவு ஆசிரியர் அணி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மிகச் சிறப்பாக கட்ட மைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்றும், அதன் செயல்பாடுகளை பொறுப்பாளர்கள் இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கூட்டத்தில் மன்னார்குடி கழக நகரச்செயலாளர் மு.இராமதாஸ் , முன்னாவல்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.ராமச்சந்திரன், எருமைப்படை அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ப.பிரபாகரன், கொரடாச் சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் பா.இந்திரஜித், நீடாமங்கலம் பகுத்தறிவு ஆசிரியர் அணி ஒன்றிய அமைப்பாளர்கா க.முரளி, எழுத்தாளர் ஒரத்தூர் சுப் பிரமணியன், மாணவர் அணி தோழர்கள் பெரியகோட்டை நா. சிவராஜ், சே.வீரமணி மற்றும் நகர் பி.பாலகிருஷ்ணன் சோத்திரை மாணவர் கழகத் தோழர் ச.சாருக் கான், ச.மகேஸ்வரன், அ.ஹரிதாசன், வி. கதிர்வேல், மற்றும் நீடாமங்கலம் பா.சபேஷ், ஆதனூர் மண்டபம் செ. கபிலன் மற்றும் கோயில் வெண்ணி ம.தீபக் பகுத்தறிவாளர்கழகத் தோழர் சி.சுதாகர், ஒரத்தூர் கழகத் தோழர் கி.மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பகுத்தறிவு எண்ணம் உடைய ஆசிரியர் பெருமக்களை பகுத்தறிவு ஆசிரியர் அணியில் இணைத்து மன்னார்குடி கழக மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணியை வலி மைப்படுத்துவது எனவும், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பில் சிந்த னைக் களம் என்ற பெயரில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அறிவார்ந்த கருத்தரங்கம் நடத்துவது எனவும், மன்னார்குடி கழக மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணியை சிறப்பாக கட்டமைத்து மாநில அளவில் நடைபெறும் கலந்துரை யாடல் கூட்டத்திற்கு 50 பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர்களை அழைத்துச் செல்வது என்று தீர் மானிக்கப்படுகிறது. இறுதியில் நீடா மங்கலம் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரி யர் அணி அமைப்பாளர் க.முரளி நன்றி கூறினார்.