மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் வழிகாட்டும் உரை
சென்னை, ஜன.8 ஏழு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 7.1.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஏழு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தமிழர் தலைவர் தலைமை வடசென்னை, தென் சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் திரண்டு வந்து கலந்து கொண்ட இக்கலந்துரை யாடல் கூட்டத்துக்கு தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.
கடவுள் மறுப்பு
கலந்துரையாடல் கூட்டத்தின் தொடக்கமாக திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை கடவுள் மறுப்புக் கூறினார். தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
உரையாற்றியோர்
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப் பிரியன், அனைத்து மாவட்டக் கழகத் தலைவர் சார்பாக தாம்பரம் ப. முத்தையன், மாநில ப.க. தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் ந. கரிகாலன், கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி ஆகியோர் உரையாற்றினர்.
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தொடக்க உரையாற்றும்போது, “இந்த 2024ஆம் ஆண்டு பல தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடும் ஆண்டாக உள்ளது. அவை சிறப்பாக கொண்டாடப்படும். வரும் ஜனவரி 17இல் தமிழர் திருநாளன்று சென்னை பெரியார் திடலில் குடும்ப விழா சிறப்பாக நடைபெறும். சென்னை புத்தகக் காட்சியில் தந்தை பெரியாரது நூல்களை பலரும் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
ஜனவரி 21இல் தஞ்சையில் நரேந்திர நாயக் அவர்கள் கலந்து கொண்டு மந்திரமா? தந்திரமா? பிரச்சார நிகழ்ச்சிக்குரிய செய்முறைப் பயிற்சி தர உள்ளார். வாய்ப்புள்ள தோழர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் பெரியார் சமூகக் காப்பணிக்கு உரிய இளைஞர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். கழகத் தலைவர் 2024ஆம் ஆண்டுக்கு வகுத்துத் தருகின்ற பணிகளை சிறப்பாக செய்து முடிப்போம்” என்று குறிப்பிட்டார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன் பேசுகையில், “இன்றைக்கு மழை இல்லாதிருக்கு மானால் தற்போதுள்ள தோழர்களைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக தோழர்கள் கலந்து கொண்டிருப்பார்கள். தமிழர் தலைவரின் தொடர் முயற்சியினால் வளர்ச்சியை நோக்கி கழகம் சென்று கொண்டுள்ளது. முன்பைவிட புதிய முகங்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண முடிகின்றது. கரோனா கால கட்டத்தில்கூட ‘விடுதலை’ நிற்காது 4 பக்கம் வந்தது. கடுமையான மழை என்றாலும்கூட ‘விடுதலை’ நிற்கவில்லை. கரோனா காலத்திலும் காணொலி வாயிலாக நாம் நடத்திய நிகழ்ச்சிகளில் கழகத் தலைவர் பங்கேற்றார்.
எல்லா மாவட்டங்களிலும் பெரியாரியல் பயிற்சிப் பட் டறை நடக்கின்றது. பெரியார் பிஞ்சு பழகு முகாம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இவைகளிலெல்லாம் பங்கு பெறும் தோழர்கள், இளைஞர்கள் முகவரிகளை கழகப் பொறுப்பா ளர்கள் பெற்று அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கழக வளர்ச்சிக்கு நல்ல வகையில் உதவும். மாவட்ட கழக அளவில் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய பதிவேடுகள் அவசியமானதாகும். நாங்கள் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் வந்து ஆய்வு செய்யும் வகையில் அவைகளைப் பார்க்க உள்ளோம்” என்று கூறினார்.
தமிழர் தலைவர் தலைமை உரையில்…
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றும் போது, “மழையின் காரணமாக கூட்டத்தைத் தள்ளி வைக்கலாமா என்று யோசித்த நிலையில், கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், சுனாமி ஏற்பட்டாலும்கூட கழகப் பணிகளுக்கு அவை ஒரு பொருட்டானவை அல்ல என ஆர்வத்தோடு தோழர்கள் ஏராளமாக வந்துள்ளீர்கள்.
குறிப்பாக இவ்வளவு மகளிர் தோழர்கள் இந்தச் சூழ்நிலையிலும் வந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
அய்யா மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும் அவருடைய கொள்கைகள் மாறவில்லை. ராஜாஜி அவர்கள் தொடங்கி நடத்திய சுதந்திர கட்சி என்ன ஆனது? சோசலிஸ்ட் கட்சி, எம்.என். ராய் அவர்களின் ரேடிக்கல் ஹியூமனிஸ்ட் பார்ட்டி ஆகிய அமைப்புகள் என்ன ஆகின?
இருந்த போதும், நம்முடைய அமைப்புக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நேரடியாக மக்களோடு தொடர்பு கொள்பவர்கள் நாம். அரசியல் கட்சிகளை விட நம்முடைய கூட்டங்களுக்கு மக்கள் அதிகம் வருகின்றார்கள்.
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் நடத்தியுள்ளது சிறப்பான ஒன்று. ஒரே வாரத்தில் நாடெங்கும் 120 பொதுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
நமக்கு முக்கியம் கொள்கைக் கண்ணோட்டம்தான் – சித்தாந்த ரீதியாக நாம் உள்ளோம். தந்தை பெரியாரது கொள்கை காலத்தை ஒட்டியது – தேவையானது.
கழக மகளிரணியின் சார்பாக எனது பிறந்தநாள் மலரை வெளியிட்டார்கள். மகளிர் நினைத்தால் சாதிப்பார்கள் என்பதற்கான அடையாளம் இது.
கழக இளைஞர்கள் அற்புதமாக பேசுகின்றார்கள் என்று பலரும் என்னிடம் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். மாவட்ட தலைவர்கள் – இளைஞரணித் தோழர்கள் நல்ல அளவுக்கு ஒன்றிணைந்து செயல்பட்டால் நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடும் சிறப்பானதாக இருக்கின்றது.
நம்முடைய ஒரே இலக்கு – ஒரே நோக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். காவி ஆட்சி இந்தியாவில் ஏற்படுவதைத் தடுப்பதாக அமைய வேண்டும். வரும் தலைமுறையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது” என்றார்.
அறிவிப்பு
சோழிங்கநல்லூர் கழக மாவட்டத்திற்குத் தலைவர் பொறுப்புக்கு வேலூர் பாண்டுவை அனைத்துக் கழகத் தோழர்களின் உற்சாகக் கரவொலிக்கிடையே தமிழர் தலைவர், கழகத் தலைவர் அறிவித்தார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
கலந்து கொண்டோர்
கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட்ட தலைவர்கள் இரா. வில்வநாதன், வெ. கார்வேந்தன், புழல் த. ஆனந்தன், வெ.மு. மோகன், நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், மாவட்ட செயலாளர்கள் செ.ர. பார்த்தசாரதி, புரசை சு. அன்புச்செல்வன், கோ. நாத்திகன், க. இளவரசன், சோழவரம் ப. சக்கரவர்த்தி, தே. ஒளிவண்ணன், விஜய் உத்த மன்ராஜ், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, வேல்.சோ. நெடுமாறன், சி. வெற்றிச்செல்வி, பசும்பொன், க. இறைவி, மு. பவானி, த.மரகதமணி, நா. சுலோசனா, கி.மணி மேகலை உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், மகளிரணியினரும், கழகத் தோழர்களும்
இக்கலந்துரையாடல் கூட்டத் தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இறுதியாக தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால் நன்றி கூறினார்.