வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 6.1.2024 அன்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான கூட்டம் நடைபெற்றது. அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.