சென்னை, ஜன. 8- பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் 1.1.2024 அன்று மாலை 05.00 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார்.வருகை புரிந்தோரை பொதுச்செயலாளர் ஆ. வெங்கடேசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் தனது முன்னுரையில் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறினார். பொதுச்செயலாளர் வி.மோகன் அமைப்பாளர்களிடம் கடந்த மாதங்களில் அளிக்க வேண்டிய விவரங்கள் குறித்தும், இன்னும் அனுப் பாதவர்கள் உடனடியாக அனுப்பவும் கேட்டுக்கொண்டார்..
தொடர்ந்து கடந்த மாத செயல் திட்டமான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை இன்னும் நடத்தி முடிக்காதவர்கள் நடத்தி முடிக்கவும், இயன்றவரை காலக் கெடுவுக்குள் செய்து முடிப்பதே சிறந்தது என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த 2024 ஜனவரி மாதம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றிய ஆர்வத்தையும் பயிற்சியையும் அளித்திடுவது என்பதான செயல்திட்டத்தை அறிவித்து, அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
மாநில அமைப்பாளர்கள் கடலூர் பெரியார் செல்வம், புதுச்சேரி ஆடிட்டர் இரஞ்சித் குமார், ஆலடி எழில்வாணன், கோவில்பட்டி முத்துகணேஷ், வடசென்னை கோபால், ஆத்தூர் மாயக்கண்ணன், தஞ்சை கோபு.பழனிவேல், பொன்னமராவதி அ.சரவணன், காஞ்சி கதிரவன், தருமபுரி அண்ணாதுரை, நாகப்பட்டினம் முத்துகிருட்டிணன், அரியலூர் தங்க சிவமூர்த்தி, திருவள்ளூர் சி.நீ. வீரமணி, மன்னார்குடி இரமேஷ், குடியாத்தம் அன்பரசன், மதுரை மகேந்திரன், துறையூர் சண்முகம், காளையார்கோவில் முத்துக்குமார், ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்து ரைத்தார்கள். மேலும் 2024 ஜனவரி மாத செயல் திட்டத்தை தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்துவது பற்றியும் கூறினார் கள். தொடர்ந்து மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் அண்ணா சரவணன், பேரா. முசு.கண்மணி, புதுவை இளவரசி சங்கர் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய் தார்கள்.
இறுதியில் தலைவர் தனது முடிவுரையில் எந்த வேலைத் திட்டத்தையும் கால தாமதம் இல்லாமல் செய்வதால் கிட்டும் பயனை எடுத்துக்கூறி, சிறப்பாக பேச்சுப் போட்டியை நடத் திட ஊக்குவித்த மாநில அமைப்பாளர்களைப் பாராட்டினார்.
ஆலடி எழில்வாணன் மற்றும் கோவில்பட்டி முத்து கணேஷ் ஆகியோர் கடந்த நாள்களில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அமைப்பின் சார்பாக பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துப் பேசினார்.
வருகிற ஜனவரி 20,21 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் நரேந்திர நாயக் அவர்களால் அளிக்கப் படவுள்ள மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல்பூர்வமான பயிற்சி வகுப்பு பற்றி எடுத்துக்கூறி, அதில் நிறைய பேர் பயிற்சி பெற ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார்.
இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்றும் தொடர்ந்து செயல்பட்டால் தான் எதிலும் வெல்ல முடியும் என்றும் கூறி முடித்தார்.
இறுதியில் பொதுச்செயலாளர் வா. தமிழ் பிரபாகரன் தனது கருத்துகளோடு நன்றியையும் கூறி முடித்தார்.