கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
18.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* அய்ந்து மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும், ராகுல் நம்பிக்கை. இந்தியாவை ஒரே சித்தாந்தம் ஆள வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அதை நாங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிர்த்து வருகிறோம் என்றும் பேச்சு.
தி இந்து:
* மோடி புகழ் பாடுவதற்கு ராணுவத்தை பயன் படுத்துவதா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்.
தி டெலிகிராப்:
* புல்வாமா தாக்குதல் குறித்து வெள்ளை அறிக்கையை மோடி அரசு வெளியிடக்கோரியும், 40 சிஆர்பிஎப் வீரர் களின் உயிரிழப்புக்கு காரணமான தவறுகளுக்கு பொறுப் பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் மேனாள் துணை ராணுவப் படையினரின் நலச் சங்கங் களின் கூட்டமைப்பு அடுத்த மாதம் டில்லியில் ஆர்ப் பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மத்தியப்பிரதேசத்தில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, மகளிருக்கு மாதந் தோறும் ரூ.1,500 உதவித் தொகை, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500, கல்விக் கட்டணம் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை ம.பி. தேர்தலுக்காக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
* ஸநாதனம் குறித்த வழக்கில், சித்தாந்த வேறுபாடு காரணமாக என் மீது மனு என உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மனு.
எகனாமிக் டைம்ஸ்:
* தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பார்வையாளராக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் நியமனம்.
– குடந்தை கருணா