7.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து ராகுல் பயணம் நடைபெறும்.
♦ இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற அனைத்து விடயங்களும் இன்னும் 10, 15 நாட்களில் முடிந்து விடும் – காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
♦ மேனாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு, பொது மக்கள் கருத்தை ஜனவரி 15க்குள் அனுப்ப வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ குருகுலங்கள் மீண்டும் இந்தியாவை, அதன் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பில்கிஸ் பானோ கூட்டு பலாத்காரம்: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில் உச்ச நீதிமன்றம் நாளை (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
தி இந்து:
♦ தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநில பொருளாதார மாக தொடர்கிறது: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
– குடந்தை கருணா