பழனி, அக். 18- பழனியில் நவம்பர் 1 தமிழர் தலை வர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் குறித்த பழனி மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 8-10-2023, ஞாயிறு காலை 10-30 மணியளவில் பெரியார் கராத்தே பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலை மைக் கழக அமைப்பாளர் திருச்சி மு.சேகர் தலை மையேற்றார்.
மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத் தனர்.
மேலும் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண் டியன், மாவட்டச் செய லாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், கருணாநிதி, அருண், கணக்கன்பட்டி சின்னத் துரை, சி.இராதாகிருட்டி ணன், பெ.இரணியன், பழனி செந்தில், மு.ரகு மான், சுப்பிரமணி, உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
எதிர்வரும் 1-11-2023, அன்று பழனிக்கு வருகை தரும் தமிழர் தலைவரை சிறந்த முறையில் வர வேற்று பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், இக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தோழர்கள், பொது மக்கள் என அனைவரை யும் ஒருங்கிணைத்து பெரும்பயணத்தை வெற்றி பெறச்செய்வது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.