பெரம்பலூர், ஜன.7- தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை முன் னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார் பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளியில் பேச்சு போட்டி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் பிர பாகரன், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி குழும தலைவர் வரதராஜன் மற்றும் முகுந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட் டியில் வென்ற மாணவ மாணவி களுக்கு பரிசளித்து பாராட்டுக் களை தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் திரா விடர் கழகத்தினர் மாவட்ட தலை வர் தங்கராசு, ஆறுமுகம், ராமு, ராஜகெண்ணடி, இளையராஜா, விஜேந்திரன், துரைசாமி, சீதாபதி, ஆதிசிவம், கந்தசாமி, மருத்துவர் கருணாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா-எம்.எல்.ஏ. பிரபாகரன் பங்கேற்பு
Leave a Comment