செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

குழு அமைப்பு
தமிழ்நாட்டில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணியை நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பிட்டு அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் பூங்கா…சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடியில், 2.80 லட்சம் சதுர அடியில் புதிதாக தொழில்நுட்பப் பூங்கா 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேர்வுதமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளுக்கான புதிய குரூப்-1 அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் மார்ச் மாதம் வெளியிட உள்ளது.

கரோனா
கடந்த 24 மணி நேரத்தில் 774 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,187 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி 2 நோயாளிகள் உயிரிழந்தனர்.

தொழில் முனைவோர்
மகளிர் தொழில் முனைவோர்களின் தயாரிப்பு பொருள்களை மாதத்தில் 5 முதல் 10 நாள்கள் வரை ஸ்டால்கள் மூலம் விற்பனை செய்ய தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் ஏற்பாடு செய்து தர உள்ளது.

மருந்து
மருந்து உற்பத்தி தொடர்பான திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’ வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கல்வி உதவி
அரசு பள்ளிகளில் 9, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக் கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

நிரம்பியது
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வைகை அணை மூன்றாவது முறையாக நேற்று (6.1.2024) நிரம் பியது. அணையின் கடந்த 64 ஆண்டு கால வரலாற்றில் மூன்று முறை நிரம்பியது இதுவே முதல் முறையாகும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *