பா.ஜ.க. அடித்தது ரூ.9200 கோடி!

viduthalai
3 Min Read

சட்டவிரோத தேர்தல் பத்திரங்களை சட்டப்பூர்வமாக்கியதால் ஆதாயம்

சென்னை, ஜன.7-வழக்கமாக எந்தவொரு நபரிடமிருந்தும் தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தான் வெளியிடப்படும்.

அறிவிக்கை வெளியிட்ட பத்து நாட் களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த வொரு கட்சியின் கணக்கிற்கும் எந்தவொரு நிறுவனமோ தனிநபரோ பணம் செலுத் தலாம்.
இந்தத் தேர்தல் பத்திரம் என்ற வடி வத்தை இந்திய அரசியலில் சட்டப்பூர்வ மாக்கி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கும் ஆளும் வர்க்க கட்சிகளுக்கும் இடையிலான மிகப்பெரும் அளவிலான பணப்பரிமாற்றத்தை அதாவது மிகப்பெரும் ஊழலை அதிகாரப்பூர்வமானதாக மாற்றிவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதில் மிக அதிகப் பலன் அடைந்தது அந்தக் கட்சி மட்டுமே.

மோடி அரசுடன் கூட்டுக் களவாணி களாக செயல்படும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், அரசு வாரி வழங்கும் சலுகை களுக்கு கைமாறாக பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடிகளை அள்ளித்தருகிறார்கள். கார்ப்பரேட்டுக ளுடன் மோடி அரசு இணைந்து செய்யும் ஜனநாயகப் படுகொலை இது.
ரிசர்வ் வங்கியின் தகவல்படி மொத்த வராக்கடனில் 76 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை 312 பெரிய கார்ப்பரேட்கள் மட்டும் வைத்துள்ளனர். இவர்கள்தான் அதிகளவில் பா.ஜ.க.விற்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்திருக்கின்றனர். அதற்குக் கைமாறாக இந்த நிறுவனங்களின் வங்கிக்கடனில் பெரும்பகுதியை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்திருக்கிறது.

தற்போது இதுவும் போதாது என்று மோசடி செய்த நிறுவனங்களுடன் சமரசம் செய்து, இருக்கும் கடனையும் தள்ளுபடி செய்யலாம்; ஒரு வருடம் கடந்த நிலையில் மீண்டும் அதே மோசடி நிறுவனங்களுக்கு கடனும் வழங்கலாம் என விதியை மோடி அரசு ரிசர்வ் வங்கி மூலம் திருத்தம் செய்தி ருக்கிறது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாது காக்கவும் தேர்தல் நடைமுறையின் நேர்மையை கருத்தில் கொண்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு ரூ.15,956.3096 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இது 29 தவணைகளாக நடந்துள்ளது.
தேர்தல் பத்திரங்களை வெளியிடவும் அதை நிர்வகிக்கவும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இது தேர்தல் பத்திர விற்பனைக்கான கமிஷன், அச்சுக்கூலி உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ரூ.13.50 கோடியை அரசிடம் வசூலித்துள்ளது.

தேர்தல் பத்திரத் திட்டத்தின் கேலிக் கூத்து என்னவென்றால் நன்கொடையாளர் கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு எந்த சேவைக் கட்டணத்தையும் (கமிஷன்) செலுத்தத் தேவையில்லை. பத்திரங்கள் அச்சிட்டதற் கான கூலியைக் கூட அரசோ, அல்லது வரி செலுத்தும் எளிய மக்கள் தான் சுமக்கிறார் கள். அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க வகை செய்யும் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கணக்கில் வராத பணம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. முன்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு நிறுவனம் அளிக்கும் நிதியின் விகிதத்தில் வரம்பு இருந்தது. ஆனால் இப்போது அதுவும் காலியாகிவிட்டது. போதாக்குறைக்கு, அர சியல் கட்சிகளுக்கு பெரும் நிறுவனங்கள் அளிக்கும் நிதி தொடர்பான தனி உரிமை களை பாதுகாக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கை கடைசியாக 2023-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன் றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, ஒன்றிய அரசாங்கத்தின் வாதம் குறித்து “யார் யாருக்கு நிதியளிக்கிறார்கள் என்பது குடிமக்களுக்குத் தெரியாது. நன் கொடையாளர்கள் அதைப் பெறுபவர்களை தெரிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமை இல்லை என்ற வாதம் கவலையளிக்கிறது. தேர்தல் பத்திரங்களில், தகவல் அறியும் உரி மையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட் டம் தொடங்கப்பட்டதில் இருந்து, பா.ஜ.க. தேர்தல் பத்திரங்களின் மூலம் அடைந்துள்ள நிகரம் லாபம் ரூ.9,200 கோடி. இது மொத்த தேர்தல் பத்திரத்தில் 57 சதவீதம் என ப்ளூம்பெர்க் தெரிவிக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *