சென்னை, ஜன.7 சென்னை கிண்டியில் நேற்று (6.1.2024) நடந்த கலைஞர் 100 விழாவில் பேசிய முதல மைச்சர் மு.க ஸ்டாலின், சென்னை பூவிருந்தவல்லி யில் 140 ஏக்கர் பரப்பள வில் ரூ. 500 கோடி மதிப் பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர் சங்கம் சார்பில் முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடத் தப்பட்டது.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டா லின் சென்னை பூவிருந்த வல்லியில் 140 ஏக்கர் பரப் பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப் பட நகரம் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார். முதலமைச்சர் மு.க ஸ்டா லின் பேசியதாவது:
தமிழ்நாடு மக்களின் உள்ளங்களில் இன்றள வும் கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தொண்டர்கள் கொடுத்த தலைவர் பட்டத்தோடு மக்கள் கொடுத்த கலை ஞர் பட்டத்திற்கும் பொருத் தமானவர் முத்தமிழறிஞர்.
வாழ்ந்த காலத்தை போலவே மறைந்த பின் னரும் நினைக்கக் கூடிய பெருமை மிக்கவர் முத் தமிழறிஞர் கலைஞர். 2018இ-ல் அவரது மறை வால் தமிழ்நாடு கலங்கி யது. அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு துறையி னர் மரியாதை கூட்டம் நடத்தி பெருமை சேர்த் தார்கள். ஆனால், அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. எழுத்து மற்றும் பேச்சாற்றல் மூலம் ரசிகர் களின் உள்ளத்தில் குடி யேறியவர் கலைஞர்.
அவர் படத்திற்கு வச னம் எழுதினால் அந்த படம் வெற்றி என்றே கருதப்படும். கருணாநிதி யின் வசனத்தை கூறித் தான் நடிகர்கள் வாய்ப்பு கேட்கும் சூழல் ஏற்பட் டது. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை அவரது சினிமா பயணம் மிகப் பெரியது. திமுக ஆட்சி அமையும் போதெல் லாம் கலைத்துறையின ருக்கு பல்வேறு திட்டங் கள் தீட்டப்பட்டு வரு கின்றன அந்த வகையில் தற்போதைய திமுக ஆட்சியும் தொடர்கிறது.
இந்த விழா மேடையி லேயே புதிய திட்டங் களை நான் அறிவிக்கி றேன். எம்ஜிஆர் பிலிம் சிட்டி ரூ.5 கோடி செல வில் 4 படப்பிடிப்பு தளத்துடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல கமல்ஹா சன் வைத்த கோரிக்கை அடிப்படையில் சென்னை பூவிருந்தவல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது.
இந்த நவீன திரைப்பட நகரில் விஎப்எக்ஸ், அனி மேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 ஸ்டார் ஓட்டல் என சகல வசதி களும் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.