கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
1 Min Read

6.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து அமலாக்கத் துறை ஏவப்படுவது, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தவறான முறையில் பயன்படுத்துவது பற்றிய புகார்களை உண்மையாக்குகிறது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குடும்ப அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள அனை வருக்கும் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்: மகளிர் உரிமைத் தொகை வரும் 10ஆம் தேதியே வழங்க ஏற்பாடு – நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு! ஒரு அமைச்சரை முதலமைச்சர் பரிந்துரை செய்யாமல் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு வாய்மொழியாக கூறியது.
தி டெலிகிராப்:
* இந்தியப் பகுதியை ஆக்கிரமித்த போதிலும் சீனாவிற்கு நற்சான்றிதழ் வழங்கியதற்காகவும், விரோதமான அண்டை நாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுத்ததற் காகவும் பிரதமர் நரேந்திர மோடியை சீன அரசு ஊடகங்கள் பாராட்டுகின்றன என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *