கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை
தாம்பரம், ஜன. 6- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற் றும் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 30.12.2023 அன்று மாலை 6:30 மணியளவில் தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்றது.
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர் இறைவி வரவேற்புரையில், பெரியார் என்ற பெயரை கேட்டாலே நம் இன எதிரிகள் அதிர்ச்சி அடைகிறார் கள். பெரியாரின் கருத்துகள் அவர் களுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. பெரியாரின் சிலையை உடைக்க நினைக்கிறார்கள் கருத்தை வெறுக் கிறார்கள் இப்படி அவர்கள் வெறுக்கும் அளவுக்கு பெரியார் என்ன செய்தார் என்று யோசித்து பார்த்தால், நம்மை சிந்திக்க சொன் னார் எதையும் சிந்தித்து ஏற்று கொள். எதையும் ஏன்,எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்க சொன்னார் என்றார்.
தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், கழக காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி,தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்தி கன், பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் அ.தா.சண்முகசுந்தரம், பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் ந.கரிகாலன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இரா.சிவசாமி, தாம் பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் தே.சுரேஷ், திராவிடர் கழக தொழிலாளரணியை சேர்ந்த மா.ராசு ,தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி, வெ.ஞானசேகரன் மற்றும் தாம்பரம் மாவட்ட துணைத் தலைவர் கு.ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள் ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மாவட்டத் தலைவர் ப.முத்தையன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கூட்டத்தில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலா ளர் எம்.யாக்கூப் (தாம்பரம் 50 வார்டு மாமன்ற உறுப்பினர்), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பொறியா ளர் சாமுவேல், மதிமுக தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் துரை மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகீர் உசேன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ராஜன் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், இந்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ராஜன் மணி, ம.தி.மு.கழக பகுதி செயலாளர் மணிவண்ணன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பொறியா ளர் சாமுவேல், திராவிட முன் னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், பகுத்தறி வாளர் கழக மாநில துணை தலைவர் ந.கரிகாலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை
கழகப் பொதுச் செயலாளர் அன்புராஜ் பேசியதாவது: இந்த கூட்டமானது டிசம்பர் 18 ஆம் தேதி அன்று தியாகராயர் நகரில் நடத்தபட்ட கூட்டத்தில் முடிவெ டுத்து தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தை நாடெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையை ஆசிரியர் அவர்கள் இட்டார்கள். அதனடிப்படையில் 120 கூட்டங் கள் நட்த்த திட்டமிடப்பட்டது . இதுவரை 80 கூட்டங்கள் நடை பெற்று முடிந்துள்ளது .தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்து பின் தனது பயணத்தை நிறைவு செய்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் விவாத பொருளாக இருக்கிறார்.அவரை பற்றி பேசுகிறார்கள், அவரை பற்றி நல்ல செய்தியும் வரும், கெட்ட செய்தியும் வரும்,சர்ச்சைக ளும் வரும்.இவையெல்லாம் நமக் குக் என்ன உணர்த்துகிறது என் றால் தந்தை பெரியாரின் கொள்கை எவ்வளவு ஆழமானது என்பதை விளங்கும்,அந்த வகையில் இந்த ஆண்டு நிறைவில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் பேர் புதிதாக பெரியாரை பற்றி தேடுகிறார்கள் என்றும் நாராயணகுரு இருந்திருக் கிறார்கள், சாகு மகாராஜ் இருந் திருக்கிறார்கள், பூலே இருந்திருக் கிறார் ஆனால் அவர்ளுடைய கொள்கைகளை எடுத்து செல்ல வேணடிய இயக்கங்கள் ஒரு கால கட்டத்திற்கு மேல் அதை செய்யாத சூழல் இருந்து வருகிறது. ஆனால் திராவிடர் கழகம் மட்டும் தான் தந்தை பெரியாரை தொடர்ந்து பேசி வருகிறது என்பது மகிழ்ச்சி யளிப்பதாக உள்ளது என்றும் தந்தை பெரியார் ஒவ்வொரு குடும் பங்களிலும் ஒருவராக இருக்கிறார்.
இன்றும் பெரியார் திடலில் ஏராளமானவர்கள் வருகிறார்கள். ஆசிரியர் அவர்களை சந்திக்க நாள் தோறும் வருகிறார்கள். அதைப் போலவே ஏராளமானோர் சுயமரி யாதை திருமணம், ஜாதி மறுப்புத் திருமணம், மணமுறிவு பெற்றோர் மறுமணம், துணையை இழந்தவர் கள் மறுமணம் என பல்வேறு தரப் பிலிருந்தும் வந்து கொண்டிருக் கிறார்கள். என்பது உட்பட பல கருத்துக் களை கூறினார்.
வழக்குரைஞர் பா.மணியம்மை
நிறைவாக சிறப்புரையாற்ற வந்த திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை பேசிய தாவது:
இன்றைக்கு புத்தக கண்காட்சி நடக்கும் போதெல்லாம் அதிகமா விற்பனையாகும் புத்தங்கள் என்றால் அது தந்தை பெரியாரின் புத்தகங்களும், அண்ணல் அம் பேத்கர் அவர்களின் புத்தகங்களும் தான்.இளைஞர்கள் புத்தகம் வாங்குகிறார்களோ இல்லையோ இளைஞர்கள் பெரியார் சிலை அருகே நின்று ஒளிப்படம் எடுத்து கொள்கிறார்கள்.காலம் கடந்து இளைஞர்கள் கூட்டம் பெரியரை விரும்பி கொண்டு இருக்கிறது, நேசித்து கொண்டு இருக்கிறது என்று கூறினார். பின்னர் விஸ்வ கர்மா யோஜ்னா திட்டத்தின் அபாயத்தை பற்றி விளக்கி சொன் னார். பார்ப்பனர்கள் மட்டும் படித்து தங்கள் பெயருக்கு பின் னால் 4,5 தலைமுறைகளாக பட் டம் போட்டு கொள்ளும் வழக்கம் இருந்தது.தாத்தா, கொள்ளு தாத்தா என அனைவரும் படித் திருப்பார்கள் ஆனால் நம்மை சமோசா விற்க செல்வார்கள்.ஆனால் கல்வி மிகவும் முக்கியம் என சொல்லி இந்தியாவிலேயே முதலில் விஸ்வகர்மா யோஜ்னா திட்டத்தின் சதியை அடையாளம் காட்டியது தமிழ் நாடு தான். பெரியார் திடலில் உடனடியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இதன் அபாயத்தை விளக்கி எச்சரித்தார். அதன் பிறகு தமிழ் நாடு முதலமைச்சர் அதை வழி மொழிந்து முழங்கினார். EWS எனும் உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் அபாயத்தை பற்றி விளக்கி கூறினார். நாட்டில் இன்றைக்கு மதவாத அரசியல் செய்து கொண்டு மக்களை ரத்த வெறியாட்டம் ஆட செய்ய வைத்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டத்தை நாட்டை விட்டே விரட்டி அடிக்க வேண்டிய தேவை உள்ளது என் பதை விளக்கி கூறினார். கழுத்தில் ஸ்டெத்தாஸ்கோப்பை போட்டு மருத்தவராக்கி அழகு பார்ப்பது தான் திராவிடம் ஆனால் அந்த கழுத்தில் இன்றைக்கு தூக்கு கயிற்றை ஏற்றி கொண்டிருக்கிறது இந்த ஓன்றிய அரசு என குறிப் பிட்டார்.
இறுதியாக தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா. குணசேகரன் நன்றி கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
பண்பொளி கண்ணப்பன், பசும் பொன், நூர்ஜகான், பகலவன், சீர்த்தி, பெரியார் பிஞ்சு மகிழன், பொழிசை கண்ணன், குன்றத்தூர் திருமலை, விடுதலைநகர் பி.சி.ஜெய ராமன், க.தமிழினியன், பெ.அண் ணாதுரை, வேலூர் பாண்டு,எஸ்.பாலசுப்பிரமணி, க.ராமு. தஞ்சை த.சேகர், என்.இளங்கோவன், சி.வ. வேலு, தனசேகரன் இளங்கோவன், என்.எஸ்.இளங்கோவன், அழகிரி (எ) நரேஷ், கோ.ராஜன், ஏ.விக் னேஷ்வரன், வி.கார்த்திக் ராஜ், எஸ்.ஆர்.வெங்கடேஷ், பி.ஜகைநீ சன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சு. ராஜன் ஜேம்ஸ், சிறை கே.சேகர், மா.குமார், எஸ்.இனியவன், இராம், தமிழ்செல்வன், செ.சந்திரசேகரன், சீராளன், ஆர்.முருகேசன், எம்.பாரி வள்ளல், ச.சுரேஷ், உடுமலை வடி வேல், வினோத் குமார், எம்.சீனி வாசன், என்.ஜி.கவிச்சந்திரன், அ.ப.நிர்மலா, கோ.பழனிசாமி, கூடுவாஞ்சேரி மா.இராசு, த.மணி கண்டன், தே.சீனிவாசன், சா.தாமோ தரன், எம்.சேகர், இரா.சு.உத்ரா பழனிசாமி, வி.பாலகிருஷ்ணன், சுந்தரம், க.தமிழ்ச்செல்வன், கே. வெங்கடேஷ், பெ.ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.