தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங் கும் எழுச்சியோடு நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:
கடலூர்
கடலூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் 2.1.2024 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை கடலூர் புதுப்பாளையத்தில் மாநகர கழகத் தலைவர் தென் சிவக்குமார் தலைமை யில் தந்தை பெரியார் நினைவு நாள் மற்றும் இழிவு நீக்கும் இறுதி முழக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர், அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாநகர செயலாளர் சின்னதுரை, தொலை தொடர்பு துறை ஜெயராமன், சிவகுமாரன், ஒன்றிய பொறுப்பாளர் தர்மன், வேகா கொல்லை வேணுகோபால், கட்டியங்குப்பம் சேகர், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், நகர செயலாளர் குணசேகரன், மாநில பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், இடிமுழக்கம் இந்திரஜித், மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன், பண்ருட்டி ஒன்றிய தலைவர் கந்தசாமி, அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசியபின் தந்தை பெரியார் தொண்டினை நினைவு பொருந்தும் அய்யாவின் இறுதி முழக்கம் உறுதி முழக்கமாய் இன இழிவு நீக்கும் முழக்கமாய் அமைந்ததன் சிறப்பு குறித்தும் மாநில கிராமப்புற பிரச்சார ஒருங் கிணைப்பாளர் அதிரடி அன்பழகன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் ஆகியோர் விளக்கி சிறப்புரை ஆற்றினர்.
கடலூரில் தந்தை பெரியார் சந்தித்த எதிர்ப்புகள் பற்றி கூட்டத்தில் விளக்கப்பட்டது முடிவில் மாதவன் நன்றி கூறினார்
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டையில் தந்தை பெரியா ரின் இறுதி முழக்கமும் – தமிழர்தலைவர் அளித்த உறுதிமுழக்கமும் சிறப்புக்கூட்டம் திருநெல்வேலிமாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் 4.1.2024 அன்று எழுச்சியோடு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார்.
மாநகர பக துணைத்தலைவர் சந்திப்பு நடராசன் ,காப்பாளர் இரா.காசி ஆகியோர் உணர்ச்சிமிக்க உரையாற்றினார்கள்.
கழகப்பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் ஒன்றரை மணிநேரம் சிறப்புரையாற்றினார்.
மாநகர செயலாளர் வெயிலுமுத்து நன்றி கூறினார்.
மாநகர பக தலைவர் முரசொலிமுருகன் உள்ளிட்ட பெருமக்கள் நாட்காட்டி, நாட் குறிப்பு வாங்கினர். நிகழ்வில் மாவட்ட பக தலைவர் செ.சந்திரசேகரன், மாவட்ட பக செயலாளர்சு.திருமாவளவன்,மாவட்டபக துணைத்தலைவர்க.முருகேசன், மாநில பக எழுத்தாளர்மன்ற ஆய்வுக் குழு உறுப்பினர் சுப நயினார்,திராவிடர் இயக்கத்தினர் பேரவை மாணவர்கழக பொறுப்பாளர் பேரா.நெல்லைபாபு, மாவட்ட இளைஞரணி தலை வர் முன்.தமிழ்ச்செல்வன், சேரை ஒன்றியத் தலைவர் கோ.செல்வசுந்தரசேகர், மாநகர பக செயலாளர் மருத்துவர் க.வேல்மணி, செயற் குழு உறுப்பினர் ச.சங்கரராசு,நெல்லை பகுதி கழக செயலாளர் ந.மகேசு,தஞ்சை பகுதித் தலைவர் இரா.கருணாநிதி,செயலாளர்.செ.மாரிகணேசு, வீரவநல்லூர் தலைவர் மா.கருணாநிதி, அயன்சிங்கம்பட்டி தலைவர் சு.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
கரூர் – புலியூர்
கரூர் மாவட்டம் புலியூரில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் கருப்பையா, குப்புசாமி நினைவரங்கம் புலியூரில் நடை பெற்றன. நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா.பெருமாள் தலை மையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வீரமணி அனைவரையும் வரவேற்று பேசினார். கழக பேச்சாளர் பூவை, புலிகேசி தந்தை பெரியாரின் இறுதி முழக் கத்தை 50ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்ப ரையை நிகழ்த்தினார். தந்தை பெரியாரின் 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வை குறித்து விளக்கமாக பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காப்பாளர் வே ராஜு, மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, பொதுக் குழு உறுப்பினர் கட்டளை உ.வைரவன், ம. ஜெகநாதன், மாவட்ட இளைஞரணித் தலை வர் அலெக்ஸ், மாவட்ட விடுதலை வாசுகர் வட்டம் அரியநாயகம் துணைச் செயலாளர், இளைஞர் அணி தோழர்கள் நைஸ், சபாபதி, கடவூர் ஒன்றியம் கார்த்தி, மாணவர் கழகத் தலைவர் பெரியார் செல்வம், மாவட்டத் துணைத் மாவட்ட துணைத் தலைவர் சின்னமுத்து, துணைச் செயலாளர் ரம்யா துணைச் செயலாளர் பெரியசாமி, துணைச் செயலாளர் காளியம்மாள் கந்தசாமி, விடு தலை, ராமலிங்கம், பாலராயர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நன்றியுரை பெரியசாமி நிகழ்த்தினார்.
ராமேசுவரம்
திராவிடர் கழத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50ஆவது நினைவு நிறைவு நாள் பொதுக் கூட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நடந்தது கூட்டத்தில் சிறப்புரையாக மாநில துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை நிகழ்த்தினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி, மாவட்ட கழக தலைவர் எம் முருகேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ் பேரின்பம், ஓலைக்குடா கழக தலைவர் கெவிக்குமார், தங்கச்சிமடம் கழக தலைவர் குழந்தை ராயர், பொதுக்குழு உறுப் பினர் காஞ்சிரங்குடி கார்மேகம், ராமநாதபுரம் நகர் தலைவர் பழ.அசோகன், கழக ராமேஸ் வரம் செயலாளர் எம் .எட்வர்ட், பகுத்தறிவு கழக மாவட்ட துணைத் தலைவர் ராஜ குமாரன் மற்றும் ராமேஸ்வரம் கருப்பையா உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.