புதுடில்லி, அக்.19 மூத்த வழக் குரைஞர் அஷ்வினி உபாத்யாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், “அரசியல் சாசனத் தின் 26 ஆவது பிரிவின்படி, அனைத்து மதத்தினரும், மத வழி பாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நிறுவனங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமை உள்ளது. ஆனால், ஹிந் துக்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர் மற்றும் சீக்கியர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் கோயில் களில் 4 லட்சம் கோயில்கள் அர சின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதேநேரம் முஸ்லிம், கிறிஸ்தவர் கள், பார்சிகளுக்கு தங்கள் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிறது. இது போல ஹிந்து உள்ளிட்ட பிற மதத்தினருக்கும் உரிமை வழங்க வேண்டும்” என கூறப்படிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் நீதி பதிகள் கூறும்போது, ‘‘விளம்பரத் துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். இதுபற்றி நாடாளு மன்றமும், மாநில சட்டப்பேரவை களும்தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்களால் இவற்றுக்கு தீர்வு கொடுக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.