திருவையாறு, ஜன. 5- மறைந்த சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் அவர்களின் படத்திறப்பு- நினைவேந்தல் நிகழ்ச்சி 3.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் திருவையாறு வட்டம் நடுக் காவேரி ஜமாத் மஹாலில் நடைபெற்றது.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், கடலூர் மாவட்ட கழக தலைவர் சொ.தண்டபாணி, குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் மணிவண் ணன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன், மன்னார்குடி கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன், பச்சையப்பா கல்லூரி அறக்கட்டளை செயலாளர் துரை.கண்ணு, தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை கா.குருசாமி, கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் மருதுதுரை, மதிமுக பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுய மரியாதைச் சுடரொளி வெ.ஜெயராமன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து, அவரது இயக்க செயல் பாடுகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தனக்கும் அவருக்கு மான நட்பு ஆகிய வற்றை நினைவு கூர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார்.
திமுக தஞ்சை மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேக ரன், காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் முனைவர் தமிழ்ச்செல்வன், மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன், கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், மாநில அமைப்பாளர் சி ரமேஷ், தலைமை கழக அமைப்பாளர் சிந்தனைச்செல்வன், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக் குமார், முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந் தூரப்பாண்டியன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் பெ.வீரையன், குடந்தை கழக மாவட்ட செயலாளர் துரைராசு, பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், கழக காப்பாளர் சாமி.திரா விடமணி, பண்ருட்டி புத்தன், பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட துணைத் தலைவர் சோம. நீலகண்டன், பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் புலவஞ்சி காமராஜ், குடந்தை மாவட்ட துணைத் தலைவர் அழகுவேல், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் வைகறை, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், லால்குடி மாவட்ட செயலாளர் அங்க முத்து, திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் பா சுதாகர், திருவையாறு ஒன்றிய துணைத் தலைவர் விவேகவிரும்பி, பெருநகர செயலாளர் மதுரகவி, நகரத் தலைவர் கவுதமன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைச்செல்வி அமர்சிங், பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, ஒன்றிய செயலாளர் புகழேந்தி, குடந்தை மாநகர தலைவர் ரமேஷ், குடந்தை மாநகர செயலாளர் சிவக்குமார், மருத்துவர் அரவிந்தன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவசிதம்பரம் என்எல்சி செயல் இயக்குனர் இளம்பருதி, கார்த்தி கேயன், ராஜப்பா மற்றும் பல்வேறு மாவட் டங்களை சார்ந்த கழக பொறுப்பாளர்கள் தோழர்கள், உறவினர்கள், நெய்வேலியில் பணியாற்றிய பணியாளர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
நெய்வேலி வெ.ஜெயராமன் அவர் களுக்கு மருத்துவ உதவிகள் செய்த மருத் துவர்கள் மருதுதுரை அரவிந்தன், செவிலியர்கள் மற்றும் ஓட்டுநர், ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி சிறப்பு செய்தார்.
ஜெயராமன் அவர்களின் வாழ்விணை யர் தேவகி ஜெயராமன், சகோதரி செந் தமிழ்ச்செல்வி யோகவனம், சகோதரர்கள் ஞானசேகரன் மலர்விழி, ராவணன் கயல் விழி, மைத்துனர் முருகேசன் உமா, மரு மகன் ரவிச்சந்திரன் வாசகி, செந்தில் கயல் விழி, மைத்துனர் மகன் முத்து காவியா, மகள்கள் தமிழ்எழில் வெங்கடேசன், தமிழ் ஈழமணி பிரவீன் குமார், தமிழ் பொழில் குலோத்துங்கன், சகோதரி மகள் கள் செந்தில் அரசி, கனிமொழி வெங்கடே சன், யாழினி கணேஷ், மகன் தென்னரசு ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற் பாடு செய்திருந்தனர். இறுதியாக நெய் வேலி ஞானசேகரன் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.