மறைவு
செஞ்சியை அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவரும், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கோ.மதியழகன் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது வாழ்விணையர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ம. தனியரசு, இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
செக்கடிக்குப்பத்தில் 500க்கு மேற்பட்ட சுய மரியாதை திருமணம் செய்து வைத்த பெரியார் பெருந்தொண்டர் அர்ஜுனன் அவர்களின் மருமகனாவார்.
தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, பகுத்தறிவுப் பாடகர் காத்தவ ராயன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்பினர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 8778780769