மதுரை, அக். 19- ரூ. 1200 கோடி மதிப்பிலான மதுரை அரசரடி ரயில்வே மைதான நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியதோடு, இந்த முயற்சியை ரயில்வே நிர்வாகம் சாடியயோடு கைவிட வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனி யாருக்கு சூறைவிடும் முயற்சியில் இறங்கிய நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, அதற்கு தேசிய பணமாக்கல் திட்டம் என பெயரிட்டது. நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு இருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங் களை தனியாருக்கு வழங்குவதும் இந்த திட்டத்தில் முக்கியமான தாகும். கடந்த சில ஆண்டுகளாகவே ரயில்வே நிர்வா கம் இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்தான், மதுரையிலும் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ரயில்வே நிர்வாகம் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மதுரை மக்களவை தொகுதி சிபிஎம் உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் 17.10.2023 அன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மய்யமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிராக நாடா ளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் ((RLDA மதுரை ரயில்வே நிலங்களை தங்க ளிடம் ஒப்படைக்குமாறு கோரி யுள்ளது. இந்த நிலங்களை தனியா ருக்கு தாரைவார்க்கவே ஒப்படைக்க கோரியுள்ளது. ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மதுரை ரயில்வே கோட்டம் அதற்கான முன் மொழிவை அனுப்பியிருப்ப தாகவும், இரண்டு கட்டங்களாக ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிகிறேன்.
முதற்கட்டமாக அரசரடி ரயில்வே மைதானம் வருகிறது. இதன் அளவு 11.45 ஏக்கர். இரண்டாவது கட்டமாக ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலம். இதன் அளவு 29.16 ஏக்கர். ஒட்டுமொத்த மாக 40.61 ஏக்கர். இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.1200 கோடி யாகும். இவ்வளவு பெரும் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடு பட்டுள்ளதாக அறிகிறேன். இது மிகப் பெரிய தவறான நடவடிக்கை. ரயில்வேயின் சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து, அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.
அரசரடி ரயில்வே மைதானம் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானம். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நாள் தோறும் பயன்படுத்தும் மைதானம். இந்த மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் மிக முக்கிய பகுதிகளாகும். மதுரை நகரில் மிக அதிகளவில் மரங்கள் இருக்கின்ற பகுதியும் இதுதான். 1550 மரங்கள் உள்ளன. அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிற மதுரையின் நுரையீரலாக ரயில்வே காலனி உள்ளது. எனவே, இவற்றை தனி யாருக்கு தாரை வார்க்கும் முடி வை ரயில்வே நிர்வாகம் உடனடி யாக கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ரயில்வே நிர்வாகம் கைவிட மறுத்தால் மதுரை மக்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தி ரயில்வே நிலங்களை காப்பாற்றுவார்கள். தனியாருக்கு தாரைவார்க்கும் முயற் சியிலிருந்து ரயில்வே நிர்வாகத்தை பின்வாங்க வைப்பார்கள் என்ப தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறினார்.
மேலும், செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்துப் பேசுகையில், தமிழ் நாட்டில் பல இடங்களை தனியாருக்கு கொடுக்க முயற்சி நடந்து கொண்டிருக்கி றது. வணிக நோக்கத்திற்காக 50, 100 வருட குத்தகைக்கு தனியாருக்கு கொடுக்க உள்ள னர். ரயில்வேயின் சொத்துக்களை ரயில் வேக்குத்தான் பயன்படுத்த வேண்டும் தவிர, தனியாருக்கு லாபம் சம்பாதிக்க பயன் படுத்த அனுமதிக்கக்கூடாது. தனியாருக்கு கொடுத்த நிலங்களி லிருந்து எந்த வருமானமும் இது வரை ஒழுங்காக வந்தது இல்லை. இது தனிநபர்களின் நலனுக்குத்தான் பயன்படும். 2021-ஆம் ஆண்டில் 15 ரயில்வே மைதானங்களை தனி யாருக்கு கொடுக்க ரயில்வே அமைச் சகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். ஓட்டப் பந்தய வீராங் கனை பி.டி. உஷா ஓடிய தடம், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி ஆடிய களம் ஆகியவற்றை தனியா ருக்கு கொடுப்பதை ஏற்கமாட் டோம் என்று நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். கடிதம் கொடுத் தேன். ரயில்வே அமைச்ச கத்தின் 15 ரயில்வே மைதானங்களின் பட்டிய லில் மதுரை மைதானம் அப்போது இல்லை. இப்போதுதான் வந்துள் ளது. கேரளாவில் இத்தகைய முயற் சியை அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே போல தமிழ்நாட்டிலும் இதைச் செய்ய முடி யும். மதுரையில் தடுத்து நிறுத்தி தமிழ் நாட்டிற்கு உதார ணத்தை உருவாக்குவோம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின் ஆகியோர் உட னிருந்தனர்.