எல்.அய்.சி. மேனாள் உயரதி காரியும், சமூகநீதி, மனிதநேய செயல் பாட்டாளருமான நெல்லை மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலவாணனின் இணையர் வெங்கடேஸ்வரி என்ற கனி (வயது 56 – சேரன்மாதேவி நெல்லை) 1.1.2024 அன்று இரவு உடல் நலமின்றி சென்னை திருவொற்றியூரில் உள்ள அவர்களது இல்லத்தில் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் உடல் அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டு நேற்று (3.1.2024) நண்பகல் திருவொற்றியூர் இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.