தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:
சம்பத்துராயன்பேட்டை
31.12.2023 ஞாயிறு அன்று மாலை ராணிப் பேட்டை மாவட்டம் சம்பத்துராயன்பேட்டையில் தந்தைபெரியாரின் 50 ஆவது ஆண்டு எழுச்சி முழக்கம் பொதுக்கூட்டம் மாவட்டதலைவர் சு.லோகநாதன் தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், மாவட்ட அமைப் பாளர் சொ.ஜீவன்தாஸ், ம.தி.மு.க ஒன்றிய செய லாளர் கெ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை யில் கழக சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி.பா.கதிரவன் சிறப்புரையுடன் தி.மு.க. தலைமைக் கழக சொற்பொழிவாளர் தக்கோலம் தேவபா லன், ஞானப்பிரகாசம், கைலாசம், க.ஆனந்தன், ஆ.அமுதன் ஆகியோரும் முன்னதாக உரை யாற்றினர். தே.மு.தி.க தோழர்கள் அதிக அள வில் பங்கேற்றனர். புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
25.12.2023 திங்கள் மாலை 5மணிக்கு புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடை பெற்ற இந்தக் கூட்டத்திற்கு நகரத் தலைவர் ரெ.மு.தர்மராசு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.
காப்பாளர் ஆ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள், செ.இராசேந்திரன், மூ.சேகர், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க.அமைப்பாளர் அ.சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், ப.க.மாவட்டத் தலைவர் செ.அ.தர்ம சேகர், ப.க.மாவட்டச் செயலாளர் இரா.மலர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்து தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணுக்கும் சமூகத் திற்கும் ஆற்றிய தொண்டுகள், அவர் மறைவுற்று 50ஆண்டுகள் ஆனபின்பும் அவரது பெயரைக் கேட்டாலே நடுங்கும் கூட்டம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள்.
மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரையாற்றும் போது தந்தை பெரியார் காலம் தொட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத்தைக் கட்டுக்கோப்புடன் எப்படி வழிநடத்தி வந்திருக் கிறார்கள் என்பது குறித்தும் ஒரு பொதுக்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைப் பிரச் சாரங்கள் நடத்துவதாக இருந்தால்கூட என் னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், எப்படியெல்லாம் கழகத் தோழர்களை வளர்த்தெடுத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன் சங்கிகள் புதுக்கோட்டையில் காவல்துறையை மீறி எப்படியெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார்.
மாநில கிராமப்புற பரப்புரைச் செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் தந்தை பெரியாரின் அரசியல் பயணம், அந்தப் பயணம் செய்த செயல்பாடுகள் தொடங்கி தந்தை பெரியார் சந்தித்த இழப்புகள், அவர் சாதித்த சாதனைகளைப் பற்றி விளக்கமாக சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மேலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று, பெரியாரையும் அண் ணல் அம்பேத்கர் அவர்களையும் முன்னிலைப் படுத்தி, அதன் வழி நடக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் திலீபன்ராஜா இன் றைய அரசியல் சூழ்நிலையில் இந்தியா கூட்டணி யின் எதிர்காலத்தைச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், தந்தை பெரி யார் அவர்களின் நீண்ட நெடுங்கால, தொலை நோக்குப் பார்வைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அவருடன் கட்சியின் பொறுப்பாளர் கள் செபா.பாவாணன், அழகு வேந்தன், கண்ணை யன் ஆகிய தோழர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மேலும் புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, மாவட்ட இளைஞர ணிச் செயலாளர் த.பொன்மதி, மாவட்ட மாணவ ரணித் தலைவர் குட்டிவீரமணி, திருமயம் ஒன் றியச் செயலாளர் க.மாரியப்பன், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, இளைஞரணி யைச் சேர்ந்த மு.சண்முகம், விடுதலைச் செய்தி யாளர் ம.மு.கண்ணன், நகர ப.கவைச் சேர்ந்த வி.சூரியமூர்த்தி, பொன்னமராவதி ஆறு.பாலச்சந்தர், மாணவர் அமைப்பு வேங்கைவயல் மாரியமம்மாள், நகர இளைஞரணித்துணைத் தலைவர் கோ.தாமரைச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மகளிரணித் தோழியர் புனிதா நன்றி கூறினார்.
செய்யாறு
செய்யாறு கழக மாவட்டம், வெம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில், தந்தை பெரியார் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு, நினைவு நாள் கூட்டம் 30.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் அ. இளங்கோவன் தலைமையில் நடை பெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக் கம் குறித்து உரையாற்றி, கூட்டத்திற்கு இணைப் புரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார்.
அழிவிடைதாங்கி மணிவண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ.முரளி, மாவட்ட திமுக ஆதிதிராவிடர் அணித் தலைவர் ஆர். கருணாகரன், பகுத்தறி வாளர் கழக ஆசிரியர் சின்னதுரை, ஆசிரியர் முபாரக், பெரியார் பற்றாளர் என். செல்வராஜ், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என். சங்கர், திராவிடர் கழகத்தின் தலைமை கழக அமைப்பாளர் பு. எல்லப்பன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக, கழகச் சொற்பொழி வாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் சிறப்புரை யாற்றினார்.
அவர்தம் உரையில், தந்தை பெரியாரின் 95 ஆண்டு கால உழைப்பு, தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் பெரியார் பேசிய கருத்துகள், இறுதி முழக்கமாக தந்தை பெரியார் பேசிய கருத்துகள், ஜாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு பற்றிய செய்திகள், வைக்கம் போராட்ட வரலாறு, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி யின் மக்களைப் பிரித்து ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்ற கேவலமான செயல்கள், திராவிட மாடல் முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சமூக நீதிச் செயல்கள், ‘திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வீரமணி என்ன சொல்கின் றாரோ அதை கூட்டணியில் உள்ள அத்தனை கட்சித் தலைவர்களும் தோழர்களும் பின்பற்ற வேண்டும்’ என்றும் ‘பெரியார் திடல் காட்டும் பாதையில் எங்கள் பயணம் செல்லும்’ என்றும் முதலமைச்சர் குறிப்பிட்ட செய்திகள், பிராமணர் களுக்கு சேவை செய்வதே சூத்திரர்களுக்கு கடமை என்று வடநாட்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சிற்குக் கண்டனம் முதலிய செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார்.
வெம்பாக்கம் திமுக மூத்த முன்னோடியும் பெரியார் பற்றாளருமான என். சேகர் அனை வருக்கும் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்ததும் இவரே ஆவார்.
கூட்டத்தில், மாவட்ட திராவிடர் கழகச் செய லாளர் பொன். சுந்தர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் என். வி. கோவிந்தன், மகளி ரணித் தோழர் முனைவர் தமிழ்மொழி, இராணிப் பேட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு. லோகநாதன், செய்யாறு கழக மாவட்டத்தின் மு. வெங்கடேசன், தங்கம் பெருமாள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
வெம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். அருள் தேவி செந்தில்குமார், வெம்பாக்கம் ஒன்றியக் கவுன்சிலர் வி. சிவப்பிரகாசம், வெம் பாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் கே. அம்சா குமார், வெம்பாக்கம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் எம். சங்கர், திமுக இளைஞரணி செயலாளர் எஸ். குமார், திமுக கிளை கழகப் பொருளாளர் எஸ். பச்சையப்பன், நடத்துனர் ஆறுமுகம் எல்அய்சி முகவர் பி. ரவி, சைக்கிள் கடை சந்திரன் உள்ளிட்ட சிறப்பு அழைப்பா ளர்களும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கூட்டத்தில் பங்கேற்றனர் .
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது.
செந்துறை
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனை கூட்டம் 24.12 .2023 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
செந்துறை அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன் தலைமையேற்க, ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். கழக காப்பாளர் சு.மணிவண்ணன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. ராமச் சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன் இளைஞரணி செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட தொழி லாளரணி தலைவர் தா.மதியழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் பேராசிரியர் வளனறிவு, மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் ஆகியோர் உரையாற்றி யதை தொடர்ந்து தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், கழகப் பேச்சாளர் புலவர் வை. நாத்திக நம்பி ஆகியோர் தந்தை பெரியா ரின் நினைவு நாளை விளக்கி இறுதி முழக்கத்தின் உரையையும், தந்தைப் பெரியாரின் உழைப்பை யும் எடுத்துச் சொல்லி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் அ. இளவழகன், விவசாய அணி அமைப்பாளர் மு.கோபால், மாவட்ட தொழிலாள ரணி அமைப்பாளர் சி. கருப்புசாமி,அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் அமைப் பாளர் பன்னீர்செல்வம், ஜெயங்கொண்டம் ஒன் றிய தலைவர் மா. கருணாநிதி, ஒன்றிய செயலா ளர் துரை. பிரபாகரன், செந்துறை ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரவடிவேல், துணைச் செயலாளர் சுப்பராயன்,ஆண்டிமடம் சுந்தர மூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற னர்.
காரைக்கால்
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டும், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா பொதுக்கூட்டமும் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 29. 12. 2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நிரவி கிளாஸ் தெருவில், காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் ரெ. ஜெய பாலன் தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர், க. பதிஜெய்சங்கர், மாவட்ட துணைத் தலைவர் கி.இராசரெத்தினம், மாவட்ட துணை செயலாளர் செ. செந்தமிழன், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கணபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. லூயிஸ்பியர், மாவட்ட மாணவர் கழக தலைவர். மோ. மோகன்ராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவிச்செல்வன், மாணவர் கழக சசிகுமார், மனோ, செ. சந்திரா ஆகியோர் முன் னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அவரையும் மாவட்ட மகளிர் அணி தலை வர் செ. சிறீதேவி வரவேற்றார்.
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி தனது தொடக்க உரையாற்றினார். காரைக்கால் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பொன். பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கணபதி, மாவட்ட மாணவர் கழக தலைவர், மோ. மோகன்ராஜ் ஆகியோர் பெரியா ரின் கருத்துகளை நன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டு இளைஞர்கள் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார்கள்.
இறுதியாக சிறப்புரை நிகழ்த்திய கழக சொற் பொழிவாளர் இராம. அன்பழகன் பேசும்போது: இங்கு எல்லோரும் பேசியதை எல்லாம் கேட்கும் போது இந்த கிளாஸ் தெரு எப்படி பெரியாரின் மண்ணாக இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது தந்தை பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆனாலும் அவரது கொள்கையும், தத்துவங்களும் இன்றைக்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தந்தை பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாள ராகவே அடையாளப்படுத்தி வருகிறது சனாதன சங்கிகள் கூட்டம் தந்தை பெரியார் ஏன் கடவுள் இல்லை என்று சொன்னார். பிறப்பால் ஒருவனை ஜாதியை சொல்லி தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று கடவுளின் பெயரால் ஒதுக்கி வைக்கும் போது அந்த கடவுள் அவர்களுக்காக பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது என கோபப்பட்டு கடவுள் இல்லை என்று சொன்னார்.
மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது கண்ணில் படக்கூடாது தெருவில் நடக்கக்கூடாது கோயிலுக்குள் போகக்கூடாது குளத்தில் தண் ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமி பிளப்பில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதை பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்ன வென்று நினைப்பது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கடவுள் இல்லை என்று சொன்னதற்கான விளக்கத்தை கொடுத் தார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஆடு, மாடு, பன்றி நடக்கலாம் மனிதன் மட்டும் நடக்கக்கூடாது என்ற ஆதிக்கத்தை எதிர்த்து தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கடும் சிறை தண்டனைகளை அனுபவித்தார். தந்தை பெரியாரை சாகடிக்க நம்பூதிரிகள் யாகம் நடத்தினார்கள். தந்தை பெரியாரின் போராட்ட வெற்றியின் காரணமாக யாரெல்லாம் அந்த வீதிகளில் நடக்கக் கூடாது என்று சொன் னார்களோ அவர்களுக்காக அந்த வீதிகள் திறந்து விடப்பட்டன வைக்கம் போராட்டத்தில் வெற்றி கண்ட தந்தை பெரியாரை வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள்.
சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற வேண்டிய வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மறைவால் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், தகை சால் தமிழர், ஆசிரியர் அய்யா அவர்களும் கலந்து கொண்டனர் எந்த தலைவர் போராடி வெற்றி பெற்றாரோ அவர் இடத்திலேயே அந்த விழா நடைபெற்றது என்பது ஒரு வரலாற்று நிகழ்வாக மாறிவிட்டது.
வைக்கம் போராட்டம் தான் மகர் குளத்தில் தண்ணீர் எடுக்க எனக்கு உந்து சக்தியாக இருந் தது என புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார் என்றால் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக சூத்திர பட் டத்தை ஒழிப்பதற்காக தந்தை பெரியார் தனது 95 ஆவது வயதிலும் இறுதி மூச்சு அடங்கும் வரை போராட்டங்களை நடத்தி மறைந்தார் என்பது காலத்தால் அழிக்க முடியாததாகி விட்டதால் இன்றைக்கும் பெரியாரின் பெயரை கேட்டாலே துடிக்கிறார்கள்.
நாடாளுமன்றத்துக்குள்ளே பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைந்து கலர் புகையை எழுப்பியவர்களைக்கூட சனாத னவாதிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் பெயரை நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி . சொன்னபோது கத்துகிறார்கள், கதறுகிறார்கள் அலறி துடிக் கிறார்கள் பெரியார் என்ற தத்துவம் கொள்கை சித்தாந்தம் அணுகுண்டை விட பயங்கரமானது அதனால் தான் சனாதனவாதிகள் பெரியார் பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள். அஞ்சி நடுங்குகிறார்கள். இந்தியாவை இந்து ராஷ்டிர மாக மாற்ற துடிக்கிறார்கள் சனாதனவாதிகள். நாம் மீண்டும் பிஜேபியை ஆட்சியில் அமர வைத்தால் மீண்டும் நாம் அடிமைகளாகவும் சூத்திரப்பட்டத்தோடும் இழி ஜாதிகளாகவும் தான் வாழ வேண்டும் அதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை தோற்கடிப் போம் மதவாத சக்திகளை விரட்டியடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.
இறுதியாக மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மு. க. ஸ்டாலின் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மகளிர் அணியை சேர்ந்த அன்பரசி, மீரா மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய் வாளர் முத்துசாமி கிளாஸ் தெரு பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கூட் டத்தை சிறப்பித்தனர். காரைக்கால் மாவட்ட இளைஞரணியிரும், மாணவர் கழகத்தினரும் கூட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தண்டராம்பட்டு
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் திருவண்ணா மலை மாவட்டம், தண்டராம்பட்டில் 29-12-2023 அன்று நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலைமையில் யாழ்திலிபன் மற்றும் பி.பட்டாபிராமன் சிறப்பு ரையாற்றினர்.
ரெட்டவயல் – பேராவூரணி
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தில் 24.12.2023 அன்று மாலை 6 மணியள வில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் – 50 ஆவது ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.வசி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பேராவூரணி ஒன்றியம் பகுத் தறிவாளர் கழக பொறுப்பாளர் சு.சதீஷ்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.
பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லதம்பி, இரா.நீலகண்டன், திமுக கிளை செயலாளர்கருப்பையன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் முனைவர் ஆ.ஜீவானந்தம் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக மாநில இளை ஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் கழகப் பேச்சாளர் சில்லத்தூர் வீர. சிற்றரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார். கூட் டத்தின் தொடக்கத்தில் மாவட்ட கழக அமைப் பாளர் சோம.நீலகண்டன் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத் தினார்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.பால சுப்பிரமணியன், பேராவூரணி ஒன்றிய செயலா ளர் சி.சந்திரமோகன், அறந்தாங்கி நகர செயலா ளர் பகுத்தறிவு பாலு, அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராஜா, பெரியார் பிஞ்சுகள் நீ.அன்புச்செல்வன் ம.பண்பாளன் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.