மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு, அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன்.
(‘குடிஅரசு’, – 24.8.1930)