பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

Viduthalai
1 Min Read

சென்னை, அக் 19  சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள பத்திரிகை செய்தி: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015இ-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம். அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் / வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30ஆ-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும், அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் அய்ம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *