தி.மு.கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (2-1-2024) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், முத்தமிழறிஞர் பதிப்பகத்தைத் தொடங்கி வைத்து, முரசொலி பாசறைப் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியாகி, பதிப்பகத்தின் சார்பில் தொகுக்கப்பட்டு உருவான 9 நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தி.மு.கழக இளைஞரணிச் செயலாளர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி புத்தக ஆசிரியர்கள், பதிப்பக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.