ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசை அகற்றினால்தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உறுதி!

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.3- மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
மனித நேயம், மதச்சார் பின்மை, சமூக நீதி, நாடாளு மன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத் தையும் கபளீகரம் செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மத வெறியை பரப்பி மக்களை கூறுபோடும் பாசிச எண்ணத் துடன் செயல்பட்டு வருகி றது. அதனை வீழ்த்தும் சாதனை மிக்க ஆண்டாக 2024 அமைந் திட வேண்டுமென்ற நம்பிக்கை யோடு புத்தாண்டை வர வேற்போம்.

ஒன்றிய பா.ஜ. அரசு மதச் சார்பற்ற ஜனநாயக கூட் டாட்சி அடித்தளம் கொண்ட அரசியல் சாசனத்தின் மீது அடுக்கடுக்கான தாக்குதல் களைத் தொடுத்திட்ட ஆண் டாகவே விடைபெறும் ஆண்டு அமைந்தது.

வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக் கோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.
வறுமை, வேலையின்மை, விலை உயர்வு, பொதுத்துறை தனியார் மயம், மனுவாத கருத் தியல் பரப்பு, பாலின அடிப்படையிலான அநீதிகள், தீண்டாமை உள்ளிட்ட ஜாதிய சமூகக் கொடுமைகள், சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டையே நாசம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை!

தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள சேதத்திற்கு உரிய நிவாரண நிதி கொடுக்க மறுத்து வருவது, மாநிலத்திற் கான நிதி பங்கீட்டை மறுப் பது உள்ளிட்ட பாகுபாட்டு வஞ்சக அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது.

பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத் தப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதன் மூலமே இந் தியாவையும், இந்திய மக் களையும் பாதுகாக்க முடி யும்.
நாடாளுமன்றத் தேர் தலை நடப்பாண்டில் நாடு சந்திக்கவுள்ள நிலையில், மக் கள் விரோத, எதேச்சதிகார, வகுப்புவாத, வலதுசாரி பாஜ அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண் டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும்.

-இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *