சென்னை, அக் 20 – தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு, மற்றும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆகியவற்றுக்கான தற் காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.
இது குறித்து தேர்வர்கள் வரும் 27-ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு அங்கீ காரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, அய்சி எஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந் தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி நிகழாண்டுக்கான திற னாய்வுத் தேர்வு கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 20,880 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதுதவிர அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப் பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நிகழ் கல்வி யாண்டில் அறிமுகப்படுத்தப்பட் டது. இதன் மூலம் பிளஸ் 1 மாணவர்களில் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக இள நிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்வர் திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்றது.
தற்போது இவ்விரு தேர்வுகளுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தேர்வுத் துறை வெளியிட் டுள்ளது. இது தொடர்பாக தேர் வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ஏற் கெனவே நடத்தி முடிக்கப்பட்ட முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மற்றும் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலி ருந்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் ஏதே னும் ஆட்சேபனை கள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங் களுடன் அக்டோ பர் 27-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக் கலாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.