சென்னை, அக் 20- மாணவர்களிடையே ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கக் கூடாது; ஆசிரியர்களையும்- பெற்றோரையும் மதிக்கும் பண்பு மேலோங்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா வலியுறுத்தினார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசி னர் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளா கத்தில் நேற்று (19.10.2023) நடை பெற்றது. விழாவில் கல்லூரியின் முதல்வர் வேணு பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கிப் பேசியது: வடசென்னை பகுதி மாணவர் களுக்காக கடந்த 1973-ஆம் ஆண்டு ஒரே ஒரு பாடப்பிரிவுடன் தொடங் கப்பட்ட அம்பேத்கர் அரசினர் கல்லூரி தற்போது 18-க்கும் மேற் பட்ட துறைகளில் பல்வேறு பாடப் பிரிவுகளுடன் செயல்படுகிறது. 50 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இந்தக் கல்லூரியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித் துள்ளது. இதன் மூலம் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத் தப்படும். மாணவர்களிடையே ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கக் கூடாது; ஆசிரியர்களையும்- பெற் றோரையும் மதிக்கும் பண்பு மேலோங்க வேண்டும். தமிழ் நாட்டில் ‘நான் முதல் வன்’ திட்டம் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் தனித்திறமைகள் கண்டறியப்பட்டு அவற்றை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள், வழிகாட்டுதல் அளிக்கப்பட்டு வருகின்றன; அவற்றை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்றார் அவர்.
இந்த விழாவில், இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு களை நிறைவு செய்த 824 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங் கப்பட்டன. இதில் கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.