எதிர்வரும் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை எதிர் கொள்வது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வமூட்டும் பயில ரங்கை ஒவ்வொரு பகுத்தறிவாளர் கழக மாவட்டமும் தங்களது மாவட்டங்களில் செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சிக்கான பொதுத் தலைப்பு ‘தேர்வை எதிர்கொள்வது எப்படி?’
இந்நிகழ்ச்சியில் பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அது பற்றிய செய்திகளை சுவையாக சொல்லும் ஒரு பயிற்சியாளர், (அவர் ஆசிரியராகவும் இருக்கலாம் அல்லது மற்றவராகவும் இருக்கலாம்) ஒரு தன்னம்பிக்கை உரையாளர் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் யாராவது ஒருவர், அல்லது பேராசிரியர் களாகவும் இருக்கலாம்.
பயிலரங்கை ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியை பள்ளிகளிலோ அல்லது பல பள்ளிகளை இணைத்து ஒரு பொது அரங்கிலோ சூழலுக்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பொதுவெளியில் ஒரு விளம்பரம் செய்திட வேண்டும்.
பயிலரங்கை – இச்செயல் திட்டத்தை ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும்.
இதனை மாநில அமைப்பாளர்கள் தங்களது பொறுப்பு மாவட்டங்களில் செயல்படுத்திட மாவட்ட பொறுப்பாளர்களை ஊக்குவித்திட வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இன்னும் நடத்தி முடிக்காதவர்கள் அதனை நடத்தி முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்செயல் திட்டம் குறித்து நிகழ்வுக்கு முன்பாகவும், நிகழ்வு முடிந்த பின்பும் உடனடியாக விடுதலைக்கு செய்தி அனுப்பிட வேண்டும் என்பதையும் வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: 9159857108