கோயிலுக்கு சென்று திரும்பியபோது
லாரி சக்கரத்தில் சிக்கிய இரு சிறுமிகள் உயிரிழப்பு
திருப்பத்தூர்,ஜன.2- புது ஆண்டு பிறப்பை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது லாரி மோதிய விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி திருப்பத்தூரில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உயிரி ழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர் விவசாயி பரந்தாமன் (47). இவர் தன்னுடைய மனைவி காவேரி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருசக்கர வாக னத்தில் ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூர் அருகே மாராப்பட்டு என்ற இடத்தில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் சென்று கொண் டிருந்த போது, முன்னால் சென்ற லாரி வளைவு ஒன்றில் திரும்பியது.
அப்போது பின்னால் வந்து கொண் டிருந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த கார்த்திகா (8), பேரரசி (5) ஆகிய 2 குழந்தைகள் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக நிகழ்வு இடத்திலேயே உயிரி ழந்தனர்.
இந்த விபத்தில் பரந்தாமன் அவரது மனைவி காவேரி, மூத்த மகள் இளவரசி (12) ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அருகில் இருந்தவர்கள் உடனடி யாக காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து நிகழ்வு இடத் திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் உயிரிழந்த 2 குழந்தை களின் சடலத்தையும் மீட்டு உடற் கூராய் வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை யினர், தப்பி யோடிய லாரி ஓட்டு நரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணித்ததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
புத்தாண்டு நாளில் கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கியதில், 2 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.