புதுவை – ஆதிலட்சுமி புத்தகசாலை ஆசிரியரும், திராவிட இயக்க உணர்வாளருமான நடேசன் கைலாசம் அவர்கள் ஆண்டுதோறும் தலைவர்கள், கலைஞர்கள், பல்துறையினரின் படத்துடன் கூடிய நாட்காட்டியை அச்சிட்டு வழங்கி வருவது பாராட்டத் தக்கது. 2024ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியும் கிடைக்கப் பெற்றோம்.
தந்தை பெரியார், நாராயணகுரு, அன்னை மணியம்மையார், அய்யா – ஆசிரியர் கி.வீரமணி சேர்ந்து, கல்வி வள்ளல் காமராசர், ஆசிரியர் கி.வீரமணி, அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, முத் தமிழறிஞர் கலைஞர். வ.உ.சிதம்பரனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா, இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், ப.ஜீவானந் தம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாது ரை, சொல்வேந்தர் சுகி.சிவம்.