சென்னை, அக்.20 நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வருகின்ற 25ஆம் தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத் தாண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பூத் கமிட்டி அமைத்தல், வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் அமைத்து தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிப்பது போன்ற பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல அரசு சார்பாக நாடா ளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படடுகிறது. வரும் கின்ற 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வரும் 25 ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் வரைவு வாக்காளர் பட் டியல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள் ளனர். இதற்கிடையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து 43 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 15 அய்.பி.எஸ். தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.