வரமாட்டாரோ…?
• புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்க மோடி வருகிறார்.
>> வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்க்க வரமாட்டாரோ?
இதற்குப் பெயர்தான்…!
• பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்பற்றி ஒரு முழுப் பக்க விளம்பரம் ஒன்றிய அரசால் தரப்பட்டுள்ளது.
>> தச்சர், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர், கொத்தனார், மீன்வலை செய்பவர், கொல்லர் என்றெல்லாம் பட்டியல் போடப்பட்டு இருக்கிறது. ஆனால், கல்யாணம், கருமாதி செய்யும் பார்ப்பனர் கள் இடம்பெறவில்லையே – இதற்குப் பெயர்தான் குலக்கல்வித் திட்டம் என்பது!
ஸ்பெல்லிங் மிஸ்டேக்!
• பிரதமர் மோடியின் திட்டங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மாற்ற ஆரம்பித்து உள்ளது.
– மாநில பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை
>> ஸ்பெல்லிங் மிஸ்டேக் – ஏமாற்ற ஆரம்பித்து உள்ளது என்று இருக்கவேண்டும்.