நியூயார்க்,நவ.24- அமெரிக்காவில் அறிவு சார் சொத்துரிமையை மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறு வனமான டிசிஎஸ் 140 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,166 கோடி) இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த மென் பொருள் நிறுவனமான எபிக் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன், டிசிஎஸ் நிறுவனம் மீது அறிவுசார் சொத்து ரிமை மீறல் குற்றம்சாட்டி விஸ்கான்சின் மாகாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
அதில், தங்கள் நிறுவ னத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தி, இந்தியாவில் ‘மெட் மந்த்ரா’ என்ற பெயரில் மருத்துவமனை நிர்வாகத்துக்கான மென் பொருளை டிசிஎஸ் உரு வாக்கி விற்பனை செய்துள் ளது. இது அறிவுசார் சொத்துரிமை சார்ந்த விதி மீறல் ஆகும். இதற்கான உரிய இழப்பீட்டை அந்த நிறுவனம் தர வேண்டும் என்று வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிசிஎஸ் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, அந்த நிறு வனம் 140 மில்லியன் டாலரை எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு இழப் பீடாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமெ ரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிசிஎஸ் மேல்முறையீடு செய்தது.
ஆனால், டிசிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை 20.11.2023 அன்று உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பு இந்திய பங்குச் சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்துக்கு பெரிய பாதிப்பு எதையும் ஏற் படுத்த வில்லை. மும்பை பங்குச் சந்தையில் டிசிஎஸ் பங்கு விலை 0.26 சதவீதம் மட்டும் குறைந்து ரூ.3,510.30 என்ற அளவில் நிலை பெற்றது.