ஜனநாயகம் – பகுத்தறிவு – சமூகநீதி – சமத்துவ ஒளி தரும் ஆண்டாக மலரட்டும்!
நகரும் ஆண்டு பல சோதனைகளும், வேதனைகளும் தந்த ஓர் ஆண்டாகி முடிந்துள்ளது.
பிறக்கும் புத்தாண்டு வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஓராண்டாக, ஜனநாயகம், பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவ ஒளி தரும் ஆண்டாகப் பூத்து மலரட்டும்! மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஆண்டாக சிறக்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
31.12.2023