சென்னை, டிச.30 தமிழ் நாட்டில் இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
ஜன.1 மற்றும் ஜன.2 ஆகிய நாட்களில் கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரி விக் கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 30.12.2023 மற்றும் 31.12.2023 வரை தமிழ் நாட்டில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் லேசானது முதல் மித மான மழை பெய் யக்கூடும்.
01.01.2024: தமிழ் நாட்டில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக் குடி மற்றும் ராமநாதபுரம் மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.01.2024: தென் தமிழ் நாட்டில் ஒரு சில இடங் களிலும், வட தமிழ் நாட்டில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக் குடி மற்றும் ராமநாத புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவாய்ப்புள்ளது.
03.01.2024: தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வட தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.01.2024: தமிழ்நாட் டில் ஒருசில இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழ் நாடு கட லோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத் திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன் னார் வளைகுடா, தென் தமிழ் நாடு கடலோரப் பகுதி களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத் திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.01.2024: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளை குடா, தென்தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட் டர் வேகத் திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.