அய்தராபாத், அக் 20 தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வாக்குறுதி யளித்தார்.
தெலங்கானாவில் 19.10.2023 அன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது: தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நிலப் பிரபுக்களுக்கும், மாநிலத்தின் சாமானிய மக்க ளுக்கும் இடையிலான போட் டியாக இருக்கும். மன்னர் களுக்கும், மக்களுக்கும் இடையிலான மோதலாக இருக்கும். இந்த தேர்தலில் மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அணி தோல்வியடையப் போவது உறுதி. 10 ஆண்டுகளாக ஆட்சி யில் உள்ள அவர் இப்போது வரை மக்களிடம் இருந்து விலகியே உள்ளார். அவரது ஆட்சியில் தெலங்கானாவில் ஊழல்கள் அதிகரித்துவிட்டன. மாநிலத்தில் அனைத்து நிலை களிலும் முதலமைச்சர் குடும் பத்தினரின் ஆதிக்கமும், கட்டுப் பாடும் உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பது தொடர்பாக நாடு முழுவதும் விவாதம் நடக்கிறது. ஆனால், பிரதமரும், தெலங்கானா முதலமைச்சரும் இது தொடர்பாக வாய்திறப்ப தில்லை. இது தொடர்பாக பிரசாரத்துக்கு வரும் அவர் களிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன். ஏற்கெனவே, கருநாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் இதே வாக்குறுதியை காங்கிரஸ் அளித்துள்ளது. எனவே, இங்கும் அதனைப் பின்பற்றுவோம். இது நமது நாட்டின் உண்மை நிலையை ஊடுருவி அறியும் ‘எக்ஸ்-ரே’ வாக அமையும். இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை எழுதுவோம்.
இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்திலும் பேசியுள் ளேன். நாட்டை வழிநடத்தும் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளில் 3 சதவீதம் பேர் மட்டுமே இதர பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் களாக உள்ளனர் என்றார் ராகுல் காந்தி.