தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெருமிதம்
சென்னை, டிச. 30- தென்மாவட்டங் களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களான கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி மாவட்டங் களில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. முன்னதாக காவல் துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 39,845 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் 48 மீட் புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட் டனர். மேலும், 8,500 காவல்துறையினரும் மீட்பு பணியில் அமர்த் தப்பட்டிருந்தனர். இதில் தூத் துக்குடி மாவட்டத்தில் மட்டும் 32 மீட்புக் குழுக்கள் மீட்பு பணி யில் ஈடுபட்டன. இதற் காக 58 படகுகள் பயன் படுத்தப்பட்டன. மீட்பு பணியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழ்நாடு காவல்துறையின் செயலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநர் எச்.எம்.ஜெயராம் செயல்பட்டார்.
கடந்த 17-ஆம் தேதியில் இருந்து 23ஆ-ம் தேதி வரை வெள்ளத்தில் சிக்கிய 21,306 பேரை காவல்துறையினர் மீட்டு உள்ளனர். மேலும் 3,248 கால் நடைகள், 265 வாகனங்கள் ஆகி யவையும் மீட்கப்பட்டுள்ளன. அதோடு மழையின்போது சாலை களில் விழுந்த 483 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கியிருந்த வர்களுக்கு 2,29,894 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மீட்புப் பணி களை துரிதப்படுத்திய சட்டம் – ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் அருண் மற்றும் களப்பணியாற்றிய அனைத்து காவல்துறையினருக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.