புதுடில்லி, அக்.20 – இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை விதிகளை மீறியதற்காக 20 லட்சம் காட்சிப் பதிவுகள் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘கூகுள்’ நிறுவனத்தின் யூ டியூப் சமூக ஊடகத்தில், தினசரி செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வீடியோக்கள் கிடைக் கின்றன. இதில், பார்வையாளர்களை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக, தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிப் பதிவுகளை யூ டியூப் நிறுவனம் நீக்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்தஏப்ரல் முதல் ஜூன் வரை, விதிமுறைகளை மீறி பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் காட்சிப் பதிவுகள் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாககூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும், விதிகளை மீறிய காரணத்துக்காக, 19 லட்சம் காட்சிப் பதி வுகள் யூடியூப் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத் தக்கது