30.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அய்க்கிய ஜனதா தளம் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு. லால் சிங் பதவி விலகல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எம்ஃபில் படிப்பை நிறுத்தும் யுஜிசி உத்தரவு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்கக் கல்வி அமைச்சர் பிரத்யா பாசு உறுதி.
* ராமர் கோவில் திறப்பை அரசியல் நோக்கத்திற்காக பாஜக பயன்படுத்துவதாக அய்யுஎம்எல் குற்றம்சாட்டி யுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், குறிப்பாக மதச்சார் பற்ற கருத்துக்களைக் கொண்டவர்கள், இதை உணர்ந்து சுதந்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தி இந்து:
* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் எந்தச் சூழ்நிலையில் மசோதாக்களை நிறுத்தி வைக்கலாம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களைக் கோரி கேரள அரசு மனு.
* பாசிசத்தை பாஜக ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு; சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளை குறைமதிப் பிற்கு உட்படுத்தும் முயற்சிகளில் இருந்து திசைதிருப்ப ஸநாதன தர்மத்தை பாஜக பயன்படுத்துகிறது என அய்க்கிய ஜனதா தளம் தீர்மானம்.
தி டெலிகிராப்:
* ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவின் மத பிரச்சாரத்தை எதிர்கொள்ள சமூக நீதிக்கான கோரிக்கையில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்கிறார் கட்டுரையாளர் சஞ்சய் ஜா.
* அரசமைப்புச் சட்டத்தை மாற்றி மனுஸ்மிருதி ஆட்சியை நோக்கி மோடி அரசு நகர்வதாக அய்க்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a comment