நெல்லை, டிச. 30- நெல்லை-தூத்துக் குடியில் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் வழங் கும் பணி தொடங்கியது. ரேசன் கடைக ளில் பொதுமக்கள் நீண்ட வரிசை யில் நின்று வாங்கிச் சென்றனர்.
நெல்லை, தென்காசி. தூத் துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேரிழப்பு ஏற்பட்டது. நெல்லை, தூத்துக் குடி மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளை பார் வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் வசிப்பவர்க ளுக்கு தலா ரூ.6ஆயிரமும், மேலும் லேசான பாதிப்படைந்த இதர தாலுகாக்களில் வசிப்பவர் கள் மற்றும் தென்காசி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்க ளுக்கு தலா ரூ.1,000 வெள்ள நிவா ரண உதவியாக வழங்கப்படுகிறது.
ரேசன் கடைகளில் பொதுமக் களுக்கு வெள்ள நிவாரண நிதி மற்றும் தலா 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தாலுகா வாரியாக கணக்கெடுப்பு பணிகள் நடை பெற்றது.
நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்து 585ரேசன் கார்டு களும், அச்சடிக்க தயாரான 3,772 ரேசன் கார்டுகளும் என மொத்தம் 5 லட்சத்து 4 ஆயிரத்து 357 ரேசன்கார்டுகள் உள்ளன. இதில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 880 ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், 1லட்சத்து 63 ஆயிரத்து 477 ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நிவாரண உதவி பெறும் வகையில், ஏற்கெனவே ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட தேதி, நேரத் தில் சென்று நிவாரண உதவி பெறும் வகையில் ஏற்பாடு செய் யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் நேற்று காலை 10 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணித் தொடங்கியது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று நிவாரண தொகை மற்றும் தலா 5 கிலோ அரிசியை பெற்று சென்றனர். டோக்கனில் குறிப் பிட்ட தேதியில் வந்த அனை வருக்கும் நிவாரண தொகை, அரிசி வழங்கப்பட்டது.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவெள்ளத் தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், சிறீவைகுண்டம், ஏரல், சாத்தான் குளம் ஆகிய 5 தாலுகாக்களில் வசிப்பவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், குறைவான பாதிப்ப டைந்த கோவில்பட்டி விளாத்தி குளம், எட்டயபுரம், ஓட்டப் பிடாரம், கயத்தாறு ஆகிய 5 தாலுகாக்களில் வசிப்பவர் களுக்கு தலா ரூ.1,000மும் வெள்ள நிவா ரண நிதியாக வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி டூவிபுரம் ரேசன்கடையில் வெள்ள நிவாரண நிதி மற்றும் தலா 5 கிலோ அரிசி வழங்கும் பணியை கனிமொழி எம். பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், “மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் உள்ள 957 ரேசன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 37 ஆயிரத்து 825 ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.215 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது’ என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணத்தொகை வழங்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக 9அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல தென்காசி மாவட் டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 67 ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 வெள்ள நிவாரண நிதி மற்றும் தலா 5 கிலோ அரிசி வழங்கும் பணி தொடங்கியது.