கிருட்டினகிரி, டிச. 30- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்ட ணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் இறுதி முழக்கம் 50-ஆம் ஆண்டு – (19.12.1973) மற்றும் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (- டிச 24/12/1973) – நாளையொட்டி காவேரிப்பட்டணம் கல்வி வள்ளல் காமராசர் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழக மேனாள் மாவட்டத் தலைவர் கள் சுயமரியாதை சுடரொ ளிகள் காவேரிப்பட்டணம் தா. திருப்பதி – மு.தியாகராசன் நினை வரங்கத்தில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
இப்பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய கழகத் தலைவர் பெ.செல்வம் தலைமை வகித்து பேசினார். மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன் வர வேற்றுப் பேசினார். நிகழ்ச் சிக்கு மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்டத் துணைச்செயலாளர் தி.கதிர வன், மாவட்ட தொழிலா ளரணி அமைப்பாளர் செ.ப. மூர்த்தி, மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், மேனாள் இளைஞ ரணி செயலாளர் வே.புகழேந்தி, ஒன்றிய மேனாள் அமைப் பாளர் சி.இராசா, மாவட்ட இளைஞரணி துணைச் செய லாளர் பூ. இராசேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
திராவிடர் கழக தலை மைக்கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி தொடக்கவுரை யாற்றினார். கழகச் சொற்பொழி வாளர் புவனகிரி யாழ்.திலீபன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது; தந்தை பெரியார் இறுதியாக சென்னை தியாகராயர் நகரில் அவர் ஆற்றிய இறுதி முழுக்க உரையை விளக்கியும் தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காகவும் வாழ்க்கை மேன்மைக்காகவும், சமூக சமுத்துவ சமுதாயம் படைக்க தனது இறுதி மூச்சு அடங்கும்வரை பாடுப்பட்ட வர் உலக மனிதநேய மாண்பா ளர் தந்தை பெரியார் அவரது மறைவிற்கு பிறகும் 50 ஆண்டு களாகியும் இந்து மதவெறி யர்களுக்கு அவர் பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்கு கின்றனர்.
அவர் விட்டு சென்றப் பணி களை தொய்வின்றி தொடர்ந்து அவர் காட்டிய வழியில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மென்மேலும் தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கு பாடுப்பட்டு வருகிறார் என அவர் பேசினார்.
திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத் தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்டத்தலைவர் த.அறிவரசன், மாவட்ட இளை ஞரணி தலைவர் சீனிமுத்து இராஜேசன், வேலம்பட்டி பேரூரட்சி மேனாள் தலைவர் தி.மு.க.சின்னசாமி, காவேரிப் பட்டணம் நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன், வி.சி.க. ஒன்றிய பொருளாளர் தொ.இரகு, சி.பி.அய். மேனாள் ஒன்றியச் செயலாளர் க.சுரேசு பாபு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தி.மு.க .மாவட்ட அமைப்புச்சார ஓட் டுநரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பி.டி.கிருஷ்ணன், வி.சி.க. ஒன்றி யச் செயலாளர் பெ.சசிக்குமார், மாவட்ட துணைத்தலைவர் வ. ஆறுமுகம், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்க ராசன், ஒன்றியத் தலைவர்கள் கிருட்டினகிரி த.மாது, மத்தூர் கி.முருகேசன், ஊற்றங்கரை செ.பொன்முடி, ஒன்றியச் செய லாளர்கள் செ.சிவராஜ், ம.ரகுநாதன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக நிர்வாகிகள் க.வெங்கடேசன், மா.சிவசங்கர் மு.வேடியப்பன், இளைஞரணி துணைச்செயலாளர் அ.கோ.இராசா, மகளிரணி சிவசக்தி, பழனி, வி.சி.க.புலி இராஜேஷ் உள்பட கழகத் தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மந்திரமா? தந்திரமா? என்ற கலை நிகழ்ச் சியை மேனாள் மண்டல தி.க. தலைவர் பழ.வெங்கடாசலம் செய்து காண்பித்தார்.
சாமியார்களும் மந்திரவாதி களும் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டத்தை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று கூறினார். நிறைவாக காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக செயலாளர் பெ.செல் வேந்திரன் நன்றி கூறினார்.