வடக்குத்து, டிச. 30- வடக்குத்து திராவிடர் கழகம் சார் பில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் மற்றும் அய்யாவின் இறு திப் பேருரை அய்ம்பதாம் ஆண்டு நினைவு பெரியார் இயல் சீர்மிகு கருத்தரங் கம் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் தலைமை யில் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணி வேல், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் முன்னிலையில் 24.12.2023 மாலை 6 மணி முதல் 9 மணி வரை பெரியார் படிப்பக வளா கத்தில் நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு வரவேற்புரை ஆற் றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பெரியாரின் போர் முறை எனும் தலைப்பில் சிறப் பான கருத்தரங்க உரை ஆற்றினார். சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடு மாறன் இழிவை நீக்கும் இறுதி முழக்கம் எனும் தலைப்பில் மரண சாசன மான பெரியாரின் கடைசி பேச்சு பற்றி பேசினார்.
முன்னதாக பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல் இயக்கப் பாடல்கள் பாடினார். கவிஞர் தீபக் கருத்தரங்க தலைப்பை ஒட்டிய கவிதை பாடி னார். கழக மகளிர் அணி தோழர்கள் கலைச் செல்வி, மதிவதனி, எழில் வதனி, கண்மணி மலர் ஆகியோரும் அறிவுச் செல்வன், தீன மோகன், சேகர், வடலூர் கழக அமைப்பாளர் முருகன், தங்க பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.