சென்னை, அக்.20 மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் காலமே சமூக நீதியின் பொற் காலமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் அய்ஏஎஸ் பணிகளில் நியமிக் கப்பட்டோர் விவரங்களை மாநிலங்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதில் “கடந்த 5 ஆண்டுகளில் அய்ஏஎஸ் பணிக்கு மொத்தம் 2 ஆயிரத்து 163 பேரும், அய்பிஎஸ் பணிக்கு 1,403 பேரும், இந்திய வனப் பணிக்கு 799 பேரும் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். இதில் 334 (7.65) எஸ்சி பிரிவினரும், 166 (3.80) எஸ்டி பிரிவினரும், 695 (15.92) ஓபிசி சமுதாயத்தினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று பதில் அளித்தார். இந்த குறை வான பிரதிநிதித்துவம் ஜாதி அடிப்படையிலான மோச மான பாகுபாட்டை காட்டு கிறது. இதற்கு ஒரே வழி, ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப் பினருக்கு எதிராக பாஜக அரசு இருப்பதால்தான், ஜாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட் டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமு தாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ராகுல்காந்தி வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறும் காலமே சமூகநீதியின் பொற் காலமாக இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.