பொதுவாக நமது பொதுப் புத்தியில் அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் என்றாலே ஈழத் தமிழர்களைத்தான் மனதில் கொண்டு வந்து காட்சியாய் நிற்கும்.
இதற்கு முக்கிய காரணம் பார்ப்பனிய நாளேடுகள் தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
திராவிட இனத்திற்கும் கடலுக்கும் உள்ள உறவு என்பது 5000 ஆண்டுகளாக தொடர்கிறது, கீழடியில் சங்கு, பவளம், சிப்பிகள் என கடல் பொருட்கள் கிடைத்துள்ளன. அதே போல் ரோமில் உள்ள துறைமுகத்தில் தென் தமிழ்நாட்டின் தேக்குமரம் மற்றும் சந்தனப்பொருட்களின் படிவங்கள் கிடைத்துள்ளன.
தமிழர்களின் வாழ்வியலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, இவை அனைத்துமே உடலில் உள்ள உறுப்புகள் போல ஒன்றோடு ஒன்று இணைந்தவை, இன்று ஆஸ்திரேலிய பழங்குடிகள், பசிபிக் பெருங்கடல் தீவுகளான டாங்கோ, உள்ளிட்ட பல தீவுகளில் வாழும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்திய தீபகற்பத்தின் தெற்குப்பகுதியில் இருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக ஆஸ்திரேலியா, டாங்கோ உள்ளிட்ட பகுதிகளை அடைந்துள்ளனர். இது சான்றுகளோடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழர்கள் எக்காலத்திலும் கண் டெய்னரில் பதுங்கி பயணம் செய்ததாக செய்திகள் கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை, கடல் நீரோட்டப் பாதைகளை காலம் காலமாக அறிந்த வர்கள் நெய்தல் நிலத்தமிழர்கள்.
டாஸ்மேனியாவில் அடையாள மிடப்பட்ட ஆமை பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் கடலில் பயணித்து ஒடிசா கடற்கரையில் வந்து முட்டையிடுகிறது. காரணம் அது கடல் நீரோட்டங்களை அறிந்து அந்த நீரோட்டம் வழியாக 2 நாட்களுக்குள் டாஸ்மேனியாவில் இருந்து ஒடிசாவிற்கு வந்துவிடுகிறது.
அதே தான் நெய்தல் பகுதி தமிழர்களின் கடற்பயண நுட்பங்கள் – தோணிகளில் பயணம் செய்பவர்கள் ஒரு நாளைக்குள் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் உள்ள கிறிஸ்மஸ் தீவினை அடைந்துவிடுவார்கள்.
அதே போல் மேற்கே பயணிப்பவர்கள் ஒரே நாளைக்குள் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன், மொரீஸியஸ் மற்றும் சீசெல்ஸ் தீவிற்குச் சென்றுவிடுவார்கள்.
இலங்கையிலிருந்து மேலே கூறிய பகுதிகளுக்குச் செல்ல வணிகக் கப்பல் களுக்கு குறைந்த பட்சம் 8 முதல் 10 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு விரைவாக செல்லும் தமிழர் களுக்கு கண்டெய்னர் பயணம் என்பது தேவையில்லாதது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிச்சென்றுள்ளார்.
ஆகையால், நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணம் செல்லவும் அவசியமில்லை. பனிசூழ்ந்த காடுகளில் நடந்து செல்லும் தேவையும் இல்லை.
ஆனால், குஜராத்திகள் உள்ளிட்ட வட இந்தியாவில் உள்ளவர்களுக்கும் அவர்களை மனிதக் கடத்தலுக்கு உட்படுத்துபவர்களுக்கும் எந்த கடல் நுட்பமும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்த ஒன்று வணிக கப்பலில் செல்லும் கண்டெயினரில் அடைத்து வைத்து ஏற்றிவிடுவது, விமானத்தில் ஆப்பிரிக்கா அனுப்பி வைத்து அங்கிருந்து அய்ரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு கடல் வழியாகவும் கால்நடையாகவும் அனுப்பி வைப்பது மட்டுமே தெரியும்.
2006ஆம் ஆண்டு ஈழத்தில் உள்ள எழுத்தாளர் ஒருவர் மும்பையில் பால் தாக்கரேவைச் சந்திக்க வந்திருந்தார். அப்போது பால் தாக்கரே உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிவிட்டோம், அவர் சென்னை திரும்பிய அடுத்த நாளே இணையம் மூலமாக பேசும் போது சீசெல்ஸ் தீவில் அவரது மகள் வீட்டிற்கு வந்ததாகக் கூறினார்.
அந்தக் காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர் களுக்கு விமானப் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்று ஆகும். அவரிடம் எப்படி இவ்வளவு விரைவாக சென்றீர்கள். எந்த விமானத்தில் என்று கேட்ட போது அவர் கூறியது, கடல் மார்க்கமாக ஒரே நாளில் சீசெல்ஸ் வந்துவிட்டேன் என்றார்.
இது தொடர்பாக மறைந்த ஒடிசா பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியது. ஆமை வழித்தடத்தில் சென்றால் சில மணி நேரங்களில் பல ஆயிரம் கடல் மைல்களை கடந்துவிடலாம் என்றார். (அந்த இலங்கை எழுத்தாளர் தற்போது ஈழத்தில் ஆர். எஸ். எஸ். கிளை ஒன்றைத் துவங்கி மோடி புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார்).