தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பாராட்டு!
சென்னை, அக். 20- தமிழ்நாட்டில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லா மல் மொழி மீதுதான் பற்றுஉண்டு. பெரியார், அண்ணா, கலைஞர் வலியுறுத்திய சமூகநீதிக்கொள்கை யால் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன்னோடி. பெண்கள் உரி மைகளுக்காக பெரியார் முதலில் நடத்திய சுயமரியாதை மாநாடு போல இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது என சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் கழக மகளிர் உரிமை மாநாட்டில் (14.10.2023) பேசிய தேசியவாத காங் கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பாராட்டு தெரிவித்தார்.
மகளிர் உரிமை மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலை வர் சுப்ரியா சுலே, பேசியதாவது:-
தமிழ்நாடு நீண்ட நெடிய பாரம் பரியத்தைக் கொண்ட மாநிலம். இங்கே ஜாதி-மத வேறுபாடுகள் இல்லாமல் மொழி மீதுதான் பற்று இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்திய சமூக நீதி கொள் கையிலும் இந்தியாவிற்கே தமிழ் நாடு தான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
பெண்கள் உரிமைகளை வலியு றுத்தி பெரியார் முதலில் சுயமரி யாதை மாநாட்டை நடத்தினார். இப்போது அதே வழியில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடை பெறுகிறது. தமிழ்நாட்டிற்கும் எனது மாநிலமான மகாராட்டி ராவுக்கும் பாரம்பரியத் தொடர்பு இருக்கவே செய்கிறது. மகாராட்டி ராவில் சத்ரபதி சிவாஜி விழா, அம்பேத்கர்ஆகியோரின் நூற் றாண்டை நாங்கள் மகாராட்டிரா வில் கொண்டா டும் நிலையில், தமிழ்நாடு இங்கே கலைஞர் நூற் றாண்டைக் கொண்டாடுகிறது.
தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மக்கள் உரிமை சார்ந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.. கூட்டாட் சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுக் கும் தமிழ்நாட்டைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். மக்களவையில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எப்போதும் என்னைச் சுற்றி தி.மு.க. எம்.பி.க்களே இருப் பார்கள். கூட்டாட்சித் தத்துவத் திற்கு எதிராக எடுக்கப்படும் நட வடிக்கைகளைத் தமிழ்நாடு கடு மையாக எதிர்த்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் கனி மொழியைக் கண்டாலே பா.ஜ.க. வினருக்குப் பயம் வந்துவிடும். இதன் காரணமாகவே அவர் பேச எழுந்தால் உடனடியாக பா.ஜ.க. வினர் அமளியில் ஈடுபடுவார்கள். பெண்கள் என்றாலேஅன்பு. கருணை என்று எங்களைப் போற்ற வேண்டாம் என்றும் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று கனிமொழி எப் போதும் கூறுவார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நலனுக்காக தமிழ்நாடு முதல மைச்சரும், எனது அண்ணனுமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு திட் டங்களை நிறைவேற்றி வருகிறார். அவரது திட்டங்கள் பெண்கள் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது.
மகாராட்டிராவில் எங்கள் கட்சியில் சிக்கல் இருப்பது உங் களுக்குத் தெரியும். எங்கள் தேசிய வாத காங்கிரஸ் சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதில் பிரச்சினை இருக்கிறது. இதனால் அடுத்து வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட எனக்கு அண்ணன் ஸ்டாலின் வாய்ப்பு தர வேண்டும்.”
-இவ்வாறு சுப்ரியா சுலே அவர் கள் பேசினார்.