தஞ்சாவூர், டிச. 29- 22.12.2023 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய திரா விடர் கழக காப்பாளர், வெ.ஜெயராமன் அவர்களின் இறுதி நிகழ்ச்சி 23 .12 .2023 மாலை 3 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடை பெற்றது
முன்னதாக வெ.ஜெயராமன் அவர் களின் விழிகள் கொடையாக வழங் கப்பட்டது. நல்லையா ரமேஷ் (தலைவர் வர்த்தகர் சங்கம்) நெய்வேலி பொறியாளர் மயூரநாதன் (தலைமை பொறியாளர், ஓய்வு), மேகநாதன் (திமுக பொதுக்குழு உறுப்பினர்), உடற் கொடை இயக்கத்தின் புரவலர் ராமச்சந்திரன், கும்பகோணம் மாவட்ட செயலாளர் சு.துரைராசு, திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார், பகுத்தறிவாளக் கழக மாநில செயலாளர் மோகன், தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மரு.மருதுதுரை, (மேனாள் தலைவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி), மரு. குழந்தைவேலு (மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர்), மதிமுக கொள்கை விளக்கத்திட்டக்குழு செயலாளர் ஆ.வந்தியதேவன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர் சிங் இரங்கல் கூட்டத்தை நெறிப்படுத்தி நடத்தினார். இறுதியாக ஆறுதல் உரை யாற்றியோருக்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டோருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றி கூறினார் மேனாள் அமைப்பாளர் வெ.ஞானசேகரன்.
அன்னாரின் உடல் மாலை 6.00 மணியளவில் சென்னை லலிதாம்பிகை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது. இறுதி நிகழ்வில்,
சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், துரை.சந்திரசேகரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் முனை வர் அதிரடி அன்பழகன், திருவாரூர் மோகன், பட்டுக்கோட்டை வீரையன், பேராவூரணி சிதம்பரம், சிதம்பரம் சித் தார்த்தன் கோ.புத்தன், சொ. தண்ட பாணி, பொறியாளர். வெங்கடேசன், அ. அருணகிரி, சித்தார்த்தன், பன்னீர் செல்வம், ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், கு.நிம்மதி, க.குருசாமி, இந்திரஜித், மதி முக பாஸ்கர், காமராசு, இரா.வெற்றிக் குமார், நெல்லுபட்டு ராமலிங்கம், பால சுப்பிரமணியன், கோ.தங்கவேலு, சி. மணிவேல், தர்மலிங்கம், கொ.மணிவண் ணன், நா.தாமோதரன், விடுதலை நீல மேகம், கோபு பழனிவேல், பாவலர் பொன்னரசு, ச.சந்துரு, அழகிரி, தில் லையம்பூர் முதியோர் காப்பக நிறுவனர் வி.நடராசன், பாலு, வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், ச. கண்ணன், த. பாசுகர், ப.மாணிக்கவேல், கு.ரத்தின சபாபதி, மதுரகவி, வெ.இராவணன், வெற்றிச்செல்வன், செல்வம் காவேரி செல்வன். இந்திரஜித், நடராசமணி, அய்யம்பேட்டை அழகுவேல், அரங்க ராசன் பொறியாளர் துரை. கண்ணன், முத்துலட்சுமி, மாத்தூர் சுதாகர் மற் றும் ஏராளமான ஊர் பொதுமக்களும் உறவினர்களும் கலந்துகொண்டு தங் களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த னர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்க ளின் இரங்கல் அறிக்கை வாசிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் களின் பயன்பாட்டிற்காக உடற் கொடை வழங்கப் பட்டது.