ஜெயங்கொண்டம், அக். 20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 16.10.2023 திங்கள்கிழமை மாலை 5 மணி யளவில் தொடங்கிய பிரச்சாரக் கூட் டத் திற்கு பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் தலைமையேற்க, ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி வரவேற்பு ரையாற்றினார் .
மாவட்ட துணைத் தலைவர் இரா. திலீபன் மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி மாவட்ட துணைத் தலை வர் ரத்தின. ராமச்சந்திரன் தொழிலதிபர் ராஜா. அசோகன், மாவட்டத் துணைச் செயலாளர் மா. சங்கர் ஆகியோர் முன் னிலை வகிக்க, காப்பாளர் சு.மணிவண் ணன் மாவட்ட செயலாளர் மு. கோபா லகிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், தலைமை கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ஆகியோரின் உரையை தொடர்ந்து கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி உரையில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா குறித்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவின் சிறப் புகள் குறித்தும் அவரின் சாதனைகள் குறித்தும், பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தியும், பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டியதன் அவ சியம் குறித்தும் விளக்கி சிறப்புரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் துரை. பிரபா கரன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
மாவட்ட தொழிலாளரணி தலை வர் தா. மதியழகன், செயலாளர் வெ. இளவரசன், மாவட் ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் இரா. ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், செந்துறை ஒன்றிய தலை வர் மு.முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார் ஆண் டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழர சன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், நகர செயலாளர் டி. எஸ். கே அண்ணாமலை, ஜெயங்கொண்டம் ஒன்றிய அமைப்பாளர் லெ.அர்ஜு னன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கா.பெரியார்செல்வன், பாவேந்தர் மன்றம் சீ.குமார், மீன்சுருட்டி பெரியார் பெருந்தொண்டர் சேக்கிழார், ரஞ்சித்குமார், ஆயுதகளம் கிருஷ்ண மூர்த்தி, சின்ன வளையம் தனபால் உத்திரக்குடி ஆ.ஜெயராமன், செந் துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க. சேகர், மாவட்ட விவசாய அணி அமைப் பாளர் ஆ. இளவழகன், ஒன்றிய அமைப் பாளர் சி. தமிழ்சேகரன், பகுத்தறிவாளர் கழத்தை சார்ந்த சு. கலைவாணன், சமூக ஆர்வலர் பீமாராவ் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.