காரைக்குடி டிச. 29- காரைக்குடி அருகில் உள்ள குன்றக்குடி ஆதீனத்தின் புலவரும் மறைந்த தவத்திரு குன் றக்குடி அடிகளார் அவர்களின் மிக நெருக்கமான தமிழறிஞருமான மரு.பரமகுரு (வயது 88) அவர்கள் 27-.12.-2023 அன்று காரைக்குடி அரு கில் உள்ள மானகிரி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது மறைவு செய்தி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி அவரது உடலுக்கு காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட துணை செயலாளர் இ.ப. பழனிவேலு, கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் கொரட்டி வீ.பாலு ஆகியோர் மலர்மாலை வைத்து இறுதி மரி யாதை செய்தனர். கழகத் தலைவர் அவர்களின் இரங்கல் செய்தி அவரது துணைவியார் ப.காமாட்சி, மகன்கள் காசிலிங்கம், சுப்பராமன், சண்முகசுந்தரம், மகள்கள் கற்பக வல்லி, அபிராமி ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது குன்றக்குடி மடத்தின் நீண்டகால ஊழியர் செல்வராஜ் உடனிருந்தார்.
மறைந்த புலவர் பரமகுரு கழ கத்தின் மீதும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீதும் அளவில்லா அன்பு கொண்டவர் ஆவார். தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் ஆகியோர் குன் றக்குடி மடத்திற்கு வரும்போது மறைந்த அடிகளாருடன் இருந்தவர்.