அயலகத் தமிழர்களுக்கான “வேர்களைத் தேடி” திட்டத்தின் முதல் பயணம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

viduthalai
2 Min Read

மாமல்லபுரம், டிச. 29 – உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக் கும் வகையில் மாமல்லபுரத்தில் ‘வேர்களைத் தேடி’ சுற்றுப் பய ணத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 27.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.

அயலகத்தில் வாழும் தமிழர் களின் நலன் காக்கவும், அயலகத் திற்கு தமிழ்நாட்டிலிருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம் பெயரும் தமிழர்களைப் பாதுகாப் பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாகப் பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமிழர்க ளின் குழந்தைகளுக்காக “வேர் களைத் தேடி” என்றொரு பண்பாட் டுப் பயணத் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருந்தார்.

இத்திட்டத்தின்படி அயலகத் தில் வாழும் 18 முதல் 30 வய துக்குட்பட்ட தமிழர்களின் இளை ஞர்களைத் தமிழ்நாடு அரசு செல வில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகை யில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதனடிப்படை யில் ’வேர்களைத் தேடி’ திட்டத் தின் முதல் பயணம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலி லிருந்து பயணம் தொடங்கியது.
இந்தப் பய ணத்தினை அயலகத் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 58 இளைஞர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு அரசு செலவில் தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திரு நெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்குப் பயணித்துத் தமி ழர்களின் கட்டடகலை, சிற்பக் கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரப் போராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய வற்றை அறிந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீரா சாமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *