சேலம், டிச.28 ஹிந்து அமைப் பினரின் எதிர்ப்பினால் நீதிமன்ற ஆணையையும் மீறி இடிக்க தயங் கிய அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு கோவிலை இடித்து சிலையை ஊர் மக்கள் கையில் கொடுத்தனர்
சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காடு பகுதியில் மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகள் பழைமையான அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தகோவிலால் அப்பகுதியில் முக்கிய சாலையில் போக்குவரத் துக்கு இடையூறாக இருந்தது பல விபத்துக்களும் நடந்துள்ளது.
இது தொடர்பாக சமூக நல அமைப்பு ஒன்று இந்த கோயிலை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கோவிலை அங்கிருந்து அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்குப் பின்னர் கோயிலை இடிக்கும்படி மூன்று மாதத் திற்கு முன்பு நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால் ஹிந்து அமைப் புகள் கோவிலை இடிக்க விடமாட் டோம் என்றுபோராட்டம் நடத்தி சாலை மறியல் செய்தனர்.
நாள்தோறும் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நேரத்தில் கோவிலால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு தாமதம் ஆகிறது என்று கூறி ஊர் மக்கள் சார்பாக சமூகநல அமைப்பு வழக்கு தொடர்ந்தது, ஆனால் ஹிந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதி காரிகள் பொக்லைன் இயந்திரங் களுடன் கோயிலை இடிக்க வந் தனர். ஏற்கெனவே ஹிந்து அமைப் பினரால் அழைத்துவரப்பட்ட சில பெண்கள் சாமி வந்ததை போன்று சாலையில் உருண்டு புரண்டனர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களை _ பணிக்கு இடையூறு செய்த வர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சிலையை ஊர் மக்களிடம் கொடுத்துவிட்டு கோவிலை அங்கிருந்து அகற்றினர்