சென்னை, டிச.28- சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர் நேஷனல் லிமிடெட் தொழிற் சாலையில், விவசாயத் திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. இதற்கு அம் மோனியா திரவம் மூலப்பொரு ளாகத் தொழிற் சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட் டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் அம் மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடு களில் இருந்து கப்பல் மூலம் இறக் குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் அமைந்துள்ள சிறு துறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்தத் தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் சேகரிக் கப்பட்டு, உற்பத்திக்குப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (26.12.2023) நள்ளிரவு 11.-45 மணியளவில் இந்தத் தொழிற் சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அம் மோனியா வாயுக் கசிவினால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், தகுந்த நிபுணர்கள் உடனே வர வழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற் பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான அவசர ஊர்திகளை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது.
இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதி களைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச் சுவிடுவதில் சிரமம் ஏற்பட்ட தையடுத்து, ஸ்டான்லி மருத் துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத் துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 52 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக் கப்பட்ட பகுதிகளில் மக்க ளுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனை களை வழங்கு வதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத் துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களது உடல் நலன் குறித்து விசாரித்து, உரிய மருத்துவ சிகிச் சைகளை வழங்கிட உத்தர விட்டார்.
தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லைஎன தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட் டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழ கத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறு வனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில் நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள் ளது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டுஅறிக் கையை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்கு மாறும், தனது விரிவான அறிக் கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தர விடப் பட்டுள்ளது. மேலும், கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அம் மோனியாவை வெளியே எடுப்ப தற்குப் பயன்படுத்தப்படும் குழாய் களை முற்றிலுமாக சரி செய்து, உரிய ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அம்மோனியா கப்பலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே, வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக் கப்படுகிறது.